OUR CLIENTS
பிரெட் அல்வா!
பிரெட் அல்வா! Posted on 22-Apr-2017 பிரெட் அல்வா!

தேவையான பொருட்கள் :
பிரெட் - 6 துண்டுகள்
சர்க்கரை - 1/2 கப்  
பால் - 2 கப்
நெய் - 1/2 கப் + 1 தேக்கரண்டி
முந்திரி - சிறிது
திராட்சை - சிறிது
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி

செய்முறை :
முதலில் பிரெட் துண்டுகளை எடுத்து ஓரங்களை வெட்டி எடுத்து பின் சிறிது துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும். அதே கடாயில் பிரெட் துண்டுகளை சேர்த்து பொன் நிறமாகும் வரை வதக்கி பால் சேர்க்கவும். மேலும் சிறிது நிமிடங்கள் அவை வேகும் வரை சமைக்கவும். பின் சர்க்கரை சேர்த்து கலந்து சிறிது நெய் விட்டு ஏலக்காய் பொடி, திராட்சை, முந்திரி சேர்த்து இறக்கினால் பிரெட் அல்வா ரெடி.

Label