OUR CLIENTS
ஐஸ் ஹாக்கி சேலஞ்ச் கோப்பை... இந்திய அணி இரண்டாமிடம்!
ஐஸ் ஹாக்கி சேலஞ்ச் கோப்பை... இந்திய அணி இரண்டாமிடம்! Posted on 26-Apr-2017 ஐஸ் ஹாக்கி சேலஞ்ச் கோப்பை... இந்திய அணி இரண்டாமிடம்!

குவைத், ஏப். 26-
சர்வதேச ஐஸ் ஹாக்கி சேலஞ்ச் கோப்பை தொடரின் ஆசிய டிவிசனுக்கான போட்டிகள் குவைத் நாட்டில் கடந்த 22-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றன. இத்தொடரில் இந்தியா, குவைத், ஓமன், மெக்காவு ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றன.

இத்தொடரில் ஓமன் மற்றும் மெக்காவு அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணி, குவைத் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வி கண்டது. இதனால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை இந்திய அணி அலங்கரித்துள்ளது. குவைத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

மேலும் இந்திய அணியின் முன்கள வீரர் சம்பா இத்தொடரின் சிறந்த முன்கள ஆட்டக்காரராக போட்டி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Label