OUR CLIENTS
முருங்கைக்கீரை சூப்!
முருங்கைக்கீரை சூப்! Posted on 26-Apr-2017 முருங்கைக்கீரை சூப்!

தேவையான பொருட்கள் :
முருங்கை இலை – 2 
கப் சீரகம் – 1 டீஸ்பூன் 
உப்பு – தேவைக்கேற்ப 
மிளகுத்தூள் – தேவைக்கேற்ப

செய்முறை :
4 பெரிய டம்ளர் அளவு தண்ணீரில் சுத்தம் செய்த 2 கப் முருங்கை இலைகளை சீரகம் சேர்த்து குக்கரில் போட்டு 4 விசில் வரும்வரை வேகவைக்கவும். பிறகு வேகவைத்த தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வேகவைத்த கீரையை சீரகத்துடன் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து மிளகுத்தூளையும் உப்பையும் சேர்க்கவும். இப்போது சுவையான முருங்கைக்கீரை சூப் ரெடி.

சத்தான இந்த சூப், குழந்தைகளும் விரும்பிக் குடிக்கும் அளவு ருசியானதும் கூட. இதே விதமாக மிளகுத் தக்காளிக் கீரை, அல்லது அரைக்கீரை வைத்து கூட சூப் செய்யலாம்.

Label