OUR CLIENTS
அதிமுக எம்பி சசிகலா புஷ்பா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாநிலங்களவையில் பரபரப்பு குற்றசாட்டு!
அதிமுக எம்பி சசிகலா புஷ்பா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாநிலங்களவையில் பரபரப்பு குற்றசாட்டு! Posted on 01-Aug-2016 அதிமுக எம்பி சசிகலா புஷ்பா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாநிலங்களவையில்  பரபரப்பு குற்றசாட்டு!

டெல்லி:
அதிமுக பெண் எம்பி சசிகலா புஷ்பா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது எம்பி பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்துவதாகவும் மாநிலங்களவையில் பரபரப்பு குற்றசாட்டு. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா தாக்கியதாக செய்தி வெளியானது. 

இது குறித்து சசிகலா புஷ்பா கூறும் போது, திமுக எம்பியான திருச்சி சிவா அதிமுக தலைமையை தவறாக பேசியதற்காகவும் அதனால் தான் அவரை தாக்கியதாகவும் சசிகலா புஷ்பா விளக்கம் அளித்திருந்தார். 

திருச்சி சிவா கூறும் போது அதிமுக எம்பியான சசிகலா புஷ்பா மது அருந்தியதாகவும் அவர் டெல்லி விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் போது திடீரென அவரது சட்டையை பிடித்து இழுத்ததாகவும் அவர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்திருந்தார். 

இதனிடையே இன்று காலை மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா அவரது கருத்தை தெரிவிக்க சபாநாயகரிடம் அனுமதி கோரினார். அப்போது சபாநாயகர் அவருக்கு அனுமதி வழங்கினார். அதனை தொடர்ந்து பேசிய சசிகலா புஷ்பா அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரை பதவி விலக வற்புறுத்துவதாகவும் புகார் அளித்தார். 

இதனை தொடர்ந்து மாநிலங்களைவையில் சலசலப்பு நடந்தது. அவரை பேச அனுமதிக்காமல் ஒரு சில எம்பிக்கள் இடையூறு விளைவித்ததாக தகவல்கள் வெளியானது. 

ஆனால் சசிகலா புஷ்பாவை பேச அனுமதிக்கமாறு காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத் ஆதரவு தெரிவித்து பேசினார். 

இந்த பிரச்சனையால் மாநிலங்களவையில் கடும் அமளி நிலவியது குறிப்பிடத்தக்கது.

Label