OUR CLIENTS
அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி பா.ஜனதா காலூன்ற முயற்சி... நக்மா!
அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி பா.ஜனதா காலூன்ற முயற்சி... நக்மா! Posted on 27-Apr-2017 அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி பா.ஜனதா காலூன்ற முயற்சி... நக்மா!

சென்னை, ஏப். 27-
தமிழக மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சத்யமூர்த்தி பவனில் இன்று நடந்தது. மாநில தலைவர் ஜான்சி ராணி தலைமை தாங்கினார். அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக அகில இந்திய பொது செயலாளர் நக்மா கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து பெண்கள் போராடி வருகிறார்கள். கோர்ட்டு உத்தரவை தமிழக அரசு மதித்து நடக்க வேண்டும். குறுக்கு வழிகளை கையாண்டு மதுக்கடைகளை திறக்க முயற்சிக்க கூடாது.

பெண்களை இழிவாக பேசிய கேரள அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவரை பதவி விலக கோரி கேரளா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுகிறார்கள். அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க கூட பா.ஜனதா அரசு தயாராக இல்லை.

மத்திய அரசு மாநில அரசு மீது பொறுப்பை தள்ளிவிட கூடாது. அவர்களது நியாயமான கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்.

தேர்தல் கமி‌ஷனிடம் பேரம் பேசியது தொடர்பாக டி.டி.வி.தினகரன் உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதில் தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு சதவீதம் கூட பா.ஜனதாவுக்கு செல்வாக்கு கிடையாது. ஆனால் எப்படியாவது காலூன்ற பார்க்கிறது. அதற்காக அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி குறுக்கு வழிகளை கையாள்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பா.ஜனதா காலூன்ற போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Label