OUR CLIENTS
முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல்... 'பாகுபலி 2'!
முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல்... 'பாகுபலி 2'! Posted on 29-Apr-2017 முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல்... 'பாகுபலி 2'!

சென்னை, ஏப். 29-
பாகுபலி-2 திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடிக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் உலகம் முழுவதம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. பெரும்பாலான தியேட்டர்களில் இந்த படத்தை பார்பதற்காக பலர் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகள் வாங்கினர்.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை(உழைப்பாளர் தினம்) என வரிசையாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் பாகுபலி 2 படத்தின் வசூல் அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது பாகுபலி 2.

Label