OUR CLIENTS
முட்டை ஃப்ரைடு ரைஸ்!
முட்டை ஃப்ரைடு ரைஸ்! Posted on 03-May-2017 முட்டை ஃப்ரைடு ரைஸ்!

தேவையானப் பொருட்கள் :
பாசுமதி அரிசி - 3 கப்
முட்டை - 4
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
மிளகு பொடி - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
எண்ணை - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லி தழை - சிறிது

செய்முறை :
பாசுமதி அரிசியை நன்றாக சுத்தம் செய்து, 6 கப் தண்ணீர் ஊற்றி பொல பொலவென வடித்துக் கொள்ள வேண்டும். பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளமாக அரிந்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணையை சூடேற்றி வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு 1 நிமிடம் வதக்க வேண்டும். முட்டைகளை உடைத்து ஊற்றி, முட்டைகள் வெந்தவுடன் உதிரி உதிரியாக வரும் வரை நன்கு கிளற வேண்டும். பின் வடித்த சாதம், உப்பு, மிளகு பொடி போட்டு நன்கு கிளறி, 3-4 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி தழையை மேலே தூவி பறிமாற வேண்டும்.

Label