OUR CLIENTS
லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிரடி... மும்பை வருமான வரி கமி‌ஷனர் கைது!
லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிரடி... மும்பை வருமான வரி கமி‌ஷனர் கைது! Posted on 03-May-2017 லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிரடி... மும்பை வருமான வரி கமி‌ஷனர் கைது!

மும்பை, மெ. 3-
மும்பையில் வருமான வரி கமி‌ஷனராக இருப்பவர் பி.பி.ராஜேந்திர பிரசாத். இவர் வருமான வரி பாக்கி தொகை செலுத்துவதில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், இதற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டது.

இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இன்று லஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் வருமான வரி கமி‌ஷனர் ராஜேந்திர பிரசாத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாகப்பட்டினத்தில் கைது செய்தனர். முன்னதாக விசாகப்பட்டினம் மற்றும் மும்பையில் உள்ள அவரது வீடு அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.1½ கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

இதே போல் ராஜேந்திர பிரசாத்துடன் மும்பை வருமான வரி அதிகாரிகள், ஊழியர்கள் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் விசாகப்பட்டினத்தில் ராஜேந்திர பிரசாத்துடனும் மற்ற 4 பேர் மும்பையிலும் கைதானார்கள். இவர்கள் மீது கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து ரூ.19 லட்சம் லஞ்சம் பெற்றுத்தர உடந்தையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைதான ராஜேந்திர பிரசாத் மும்பை கொண்டு வரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கைதான மற்ற 5 பேரும் சி.பி.ஐ. காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

லஞ்ச வழக்கில் வருமான வரி கமி‌ஷனர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Label