OUR CLIENTS
டெல்லியில் பள்ளியில் வாயு கசிவு... 100 மாணவர்கள் மயக்கம்!
டெல்லியில் பள்ளியில் வாயு கசிவு... 100 மாணவர்கள் மயக்கம்! Posted on 06-May-2017 டெல்லியில் பள்ளியில் வாயு கசிவு... 100 மாணவர்கள் மயக்கம்!

புதுதில்லி, மே. 6-
புதுடெல்லியில் உள்ள துல்லக்பாத் பகுதியில் விடுதியுடன் கூடிய பள்ளி செயல்பட்டு வருகிறது.

இன்று காலை மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் இருந்தனர். அப்போது அங்கிருந்த கெமிக்கல் கண்டெய்னரில் இருந்து வாயு கசிவு பள்ளியில் பரவியது. அதை சுவாதித்த மாணவ - மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.

இதை பார்த்த ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 100-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் மயக்கம் அடைந்து விழுந்தனர். கண், தொண்டை எரிச்சல் ஏற்பட்டு பாதிப்பு அடைந்தனர். மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மாணவர்களை மீட்டு ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Label