OUR CLIENTS
மு.க.ஸ்டாலின் தளபதியாக மட்டுமே இருக்க முடியும், மன்னராக முடியாது... அமைச்சர் செங்கோட்டையன்!
மு.க.ஸ்டாலின் தளபதியாக மட்டுமே இருக்க முடியும், மன்னராக முடியாது... அமைச்சர் செங்கோட்டையன்! Posted on 06-May-2017 மு.க.ஸ்டாலின் தளபதியாக மட்டுமே இருக்க முடியும், மன்னராக முடியாது... அமைச்சர் செங்கோட்டையன்!

ஈரோடு, மே. 6-
ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு, மறைந்த 12 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கி பேசினார்கள். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.

முன்னதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வறட்சி நிவாரணமாக இதுவரை ரூ.2 ஆயிரத்து 647 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அரசின் செயல்பாடுகள் மந்தமாக நடைபெற்று வருவதாகவும், செயல் இழந்த அரசாக விளங்குவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். இது முற்றிலும் தவறான கருத்து. தமிழக அரசின் செயல்பாடுகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தளபதியாக மட்டும் தான் இருக்க முடியும். ஒருபோதும் மன்னராக முடியாது. நீட் தேர்வு குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிக்கூடங்களில் உள்ள 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக கூறுகிறார்கள்.

இதுகுறித்து மாணவ-மாணவிகளோ, பெற்றோர்களோ புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் கல்விக்கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் தனியார் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Label