OUR CLIENTS
ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா!
ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா! Posted on 10-May-2017 ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா!

அரூர், மே. 10-
அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக கொடியேற்றுதல், கங்ஙனம் கட்டுதல் நிகழ்சியுடன் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) தொடங்கியது. தொடர்ந்து, கோயிலில் வாஸ்துபூஜை, கணபதி ஹோமம், நவகிர ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 8 மணியளவில் ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல், மாவிளக்கு, விளக்கு பூஜைகள் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

விழாவில், தொழிலதிபர் முத்து ராமசாமி, பாஜக விவசாய அணி மாவட்ட பொதுச்செயலர் கே.குழந்தை ரவி, மாவட்ட துணைத் தலைவர் கே.ஜெயக்குமார், ஊர்கவுண்டர் சேட்டு, சொக்கலிங்கம், கண்ணன், கதிரவன், விஷ்ணு கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Label