OUR CLIENTS
கருணாநிதியை சந்திக்கிறார் சோனியா!
கருணாநிதியை சந்திக்கிறார் சோனியா! Posted on 10-May-2017 கருணாநிதியை சந்திக்கிறார் சோனியா!

சென்னை, மே. 10-
தி.மு.க., தலைவர் கருணாநிதி, 2016 டிச., முதல், உடல்நலம் குன்றி, வீட்டில் இருக்கிறார். துணைவி ராஜாத்தி, மகள்கள் செல்வி, கனிமொழி ஆகியோர் அவரை கவனித்து வருகின்றனர். ராஜாத்தி, செல்வி வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் திரவ உணவுகள் மட்டுமே, அவருக்கு வழங்கப்படுகின்றன.

சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெறும், கருணாநிதியின் சட்டசபை வைர விழாவில் பங்கேற்க, ஜூன், 3ல், சோனியா சென்னை வருகிறார். அப்போது, கோபாலபுரம் வீட்டிற்கு சென்று, கருணாநிதியை சந்தித்து, உடல்நலம் விசாரிக்க திட்டமிட்டுஉள்ளார்.

விழாவிற்கு வரும் பீஹார், ஒடிசா உள்ளிட்ட மாநில முதல்வர்களும், கருணாநிதியை சந்திக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், கருணாநிதியை தொண்டர்கள் சந்தித்தால், தொற்று ஏற்பட்டு, அவரது உடல்நலத்திற்கு பின்னடைவு ஏற்படுத்தும் என, டாக்டர்கள் தடை விதித்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘’டாக்டர் அனுமதி தந்தால் தான், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தொண்டர்களை சந்திப்பதுபற்றி முடிவு செய்யப்படும்,’’ என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

அவரது பேட்டி: ஜூன், 3ல் நடக்கும், கருணாநிதியின் சட்டசபை வைர விழாவில், தேசிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். நானும், பல தலைவர்களுக்கும், மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன்.

டில்லியில், கனிமொழியும், சில தலைவர்களை நேரடியாக சந்தித்து, அழைப்பு விடுத்திருக்கிறார். அதே போல, டி.கே.எஸ்.இளங்கோவனும், பல தலைவர்களை சந்திக்க இருக்கிறார். வைர விழாவில், யாரெல்லாம் பங்கேற்க உள்ளனர் என்பது, முறையாக அறிவிக்கப்படும்.

கருணாநிதியின் உடல்நிலை சீரான முன்னேற்றம் அடைந்து வருகிறது. இருப்பினும், டாக்டர்கள் அனுமதி தந்தால் மட்டுமே, தொண்டர்களை சந்திப்பது பற்றி முடிவு செய்யப்படும்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Label