மீன்வளத் துறையில் உதவியாளர் பணி! Posted on 10-May-2017
மீன்வளத் துறை ஆய்வக அலுவலகத்தில் காலியாக உள்ள இரண்டு உதவியாளர் காலிபணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வரும் 23 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள மீன்வளத் துறை ஆய்வக அலுவலகத்தில் 2 மீன்வள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு 1.1.2017 அன்று 18 வயது முதல் 35 வயதுக்குள்ளும், தமிழில் எழுதப் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதோடு நீச்சல், மீன்பிடித்தல், வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழுது பார்க்கவும் தெரிந்திருப்பது அவசியம். மீன்வளத் துறையில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தகுதியுள்ளோர் முழு விவரங்களுடன் சென்னை மீன்வள துறை இணை இயக்குநர் (மண்டலம்), சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர், சென்னை--&28 என்ற முகவரியில் வரும் 23 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.