OUR CLIENTS
காணாமல் போன கடற்கரை... ஒரே நாளில் மீண்டும் கிடைத்த அதிசயம்!
காணாமல் போன கடற்கரை... ஒரே நாளில் மீண்டும் கிடைத்த அதிசயம்! Posted on 10-May-2017 காணாமல் போன கடற்கரை... ஒரே நாளில் மீண்டும் கிடைத்த அதிசயம்!

அயர்லாந்து, மே. 10-
அயர்லாந்து தீவில் 33 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சூறாவளி காற்றால் கடற்கரையின் மணற்பரப்புகள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மணல் பரப்புகள் உருவாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தில் அச்சீலீஸ் தீவுகள் என ஒரு அமைதியான தீவு உள்ளது. இங்கு கடந்த 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த பகுதியின் மொத்த ஜனத்தொகையே 3000 தான். ஆனால் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாவாசிகள் இங்கு அதிகம் வந்து செல்கிறார்கள்.

அச்சீலீஸ் தீவுகள் அமைதிக்காகவும், இயற்கை சூழ்ந்த பகுதிகளுக்கும் பெயர் போனது. இந்த தீவில் Dooagh என்னும் ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 1984 வரை ஒரு அழகான கடற்கரை இருந்தது. அந்த வருடத்தில் அடித்த ஒரு பெரும் சூறாவளியில் கடற்கரையில் இருந்த மொத்த மணற்பரப்பும் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டது.

அதன் பின்னர் அந்த பகுதியில் வெறும் பாறைகள் மட்டுமே இருந்தன. தங்களின் அழகான மணற்பரப்பு கொண்ட கடற்கரை இல்லாமல் போய்விட்டதை நினைத்து அந்த கிராம மக்கள் மனம் வருந்தினார்கள்.

இந்நிலையில், 33 வருடங்கள் கழித்து 2017ல் திடீரென ஒரு நாள் அந்த கடற்கரையில் மணல் சேர ஆரம்பித்தது. பின்னர் அடுத்த 10 நாட்களில் பல டன் மணல் சேர்ந்திருக்கிறது. இந்த மணல்கள் எல்லாம் சேர்ந்து 300 மீட்டர் நீளத்துக்கு புது கடற்கரையை உருவாக்கியுள்ளது.

இதையடுத்து, Foundation for Environmental Education என்னும் அமைப்பு கடற்கரையின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து படகு சவாரி போன்ற சேவைகளை சுற்றுலாவாசிகளுக்கு தர அனுமதிக்கும்.

இந்த விஷயம் நடந்தால் அங்கு வசிக்கும் கிராம மக்களுக்கு இது பொருளாதார ரீதியாகவும் உதவும் என்பதால் அதை நோக்கி அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Label