OUR CLIENTS
பழனிசாமி அரசை மிரட்டும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்!
பழனிசாமி அரசை மிரட்டும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்! Posted on 11-May-2017 பழனிசாமி அரசை மிரட்டும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்!

சென்னை, மே. 11-
அ.தி.மு.க., - எம்.எல் .ஏ.,க்கள் ஒவ்வொருவரும், அரசை மிரட்ட துவங்கியுள்ளனர். சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய, பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக, 12 எம்.எல். ஏ.,க்கள் உள்ளனர்.

அவர்கள், பழனிசாமி அரசுக்கு எதிராக, பகிரங்க போர்க்கொடி தூக்கி உள்ளனர். பழனிசாமி அரசுக்கு, 122 எம்.எல். ஏ.,க்கள் ஆதரவு அளித்துள்ளனர். அதில், தினகரனுக்கு ஆதரவாக, எட்டு 8 எம்.எல். ஏ.,க் கள் உள்ளனர். அவர்கள், பழனிசாமி க்கு கட்டுப்படாமல், கட்சிக்குள் தனி அணியாக செயல்படுகின்றனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின எம்.எல்.ஏ.,க்கள், 27 பேர், தங்கள் சமுதாயத் திற்கு, கூடுதலாக அமைச்சர்பதவி கேட்டு வரு கின்றனர். அவர்களும், தனி அணியாக உள்ளனர். முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வு மான வெங்கடாசலம், அமைச்சர் பதவி கேட்டு, போர்க்கொடி தூக்கி உள்ளார். அவர், 50 எம்.எல்.ஏ.,க் கள், 10 அமைச்சர்கள் தொடர்பில் இருப்பதாகக் கூறி, அரசுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர், செந்தில் பாலாஜி, போக்கு வரத்து அமைச்சர்,எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார். அவரும் தனக்கு, 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பன்னீர் அணியைச் சேர்ந்த, முன் னாள் அமைச்சர் செம்மலை, ‘35 எம்.எல். ஏ.,க் கள், 12 அமைச்சர்கள், தங்கள் அணிக்கு வர, தயா ராக உள்ளனர்’ எனக்கூறி, பரபரப்பு ஏற்படுத்தி யுள்ளார். ஜெ., இருந்த வரை, வாய் திறக்க பயந்த எம்.எல்.ஏ.,க்கள், ஆளாளுக்கு அரசை மிரட்டதுவங்கியிருப்பது, முதல்வர் மூத்த அமைச்சர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Label