OUR CLIENTS
அமைச்சரை காப்பாற்ற தில்லு முல்லு... போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை?
அமைச்சரை காப்பாற்ற தில்லு முல்லு... போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை? Posted on 11-May-2017 அமைச்சரை காப்பாற்ற தில்லு முல்லு... போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை?

சென்னை, மே. 11-
பண மோசடி புகாரில், அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிந்து விசாரிக்காமல், தில்லு முல்லு வேலைகளில் ஈடுபட்ட, டி.எஸ்.பி., மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள, கீழவாளாச்சேரி செட்டிதோப்பு பகுதியை சேர்ந்தவர், எஸ்.வி.எஸ்.குமார்; ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு உள்ளார். இவர், சென்னை, மயிலாப்பூரில் உள்ள, தனக்கு சொந்தமான வீட்டை ஆக்கிரமித்தோரை காலி செய்ய, அமைச்சர் காமராஜருக்கு, அவரது உறவினர் ராமகிருஷ்ணன் வாயிலாக, 30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

பலமாதங்களாகி யும், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது, அமைச்சரும், அவரது உறவினரும், கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது. இது குறித்து, 2015ல்,மன்னார்குடி போலீசில், குமார் புகார் செய்து உள்ளார். அப்போது, மன்னார்குடி, டி.எஸ்.பி.,யாக இருந்த அறிவானந்தம், வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்ததுடன், குமாரிடம் இருந்த அசல் ஆவணங்களையும் பெற்று உள்ளார். அதன் பின், அமைச்சரின் உறவினர்கள், குமாரை தாக்கி உள்ளனர்.

இதன் பின்னணியில், டி.எஸ்.பி., இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது . இதன்பின், அமைச்சர் காமராஜர் மீது வழக்கு பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மன்னார்குடிபோலீசார் வழக்குப்பதிவு செய்ய வில்லை. இதனால், குமார் உச்ச நீதிமன்றத்தை அணுகி னார். நீதிபதிகள் கடும் உத்தரவு பிறப்பித் ததால், அமைச்சர் காமராஜ் மற்றும் ராமகிருஷ்ணன் மீது, மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வழக்கு பதிவின் போது, மன்னார்குடி, டி.எஸ்.பி.,  ரவிச்சந்திரன், விபத்தில் சிக்கி, ஒருமாத விடுப் பில் இருந்ததால், நன்னிலம், டி.எஸ்.பி., அறிவானந்தமே, மன்னார்குடி, டி.எஸ்.பி., பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். அவர் தற்போது, தேனி மாவட்ட, சமூக நீதி பிரி வுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், அமைச்சர் காமராஜ் விவகாரத்தில், அறிவானந்தம் நடத்திய தில்லுமுல்லு வேலை கள் குறித்து விசாரணை நடத்தி, கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

Label