OUR CLIENTS
எளிய முறையில் வீட்டு தோட்டம்!
எளிய முறையில் வீட்டு தோட்டம்! Posted on 11-May-2017 எளிய முறையில் வீட்டு தோட்டம்!

நாம்  எளிய முறையில் புதினா வளர்க்கலாம். புதினா இலைகளை கிள்ளிக்கொண்டு அதன் வேர் உள்ள தண்டுகளை எடுத்து தொட்டியில் அல்லது நிலத்தில் நடுவும்.

போதிய அளவு காலையிலும் மாலையிலும் நீர் தெளித்தால் போதுமானது. மிதமான சூரிய ஒளியிலும் நன்றாக வளரும். மூன்று வார காலத்தில் புதினாவை அறுவடை செய்யலாம். 4 தொட்டிகளில் வைத்தால் 2 வாரத்துக்கு ஒரு முறை, 2 கட்டு கீரைகளை அறுவடை செய்யலாம். நிலத்தில் நட்டால் அறுவடை இன்னும் கூடுதல் ஆகும். 

புதினாவின் எண்ணிலடங்கா பயன்கள் கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டு வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.  அதுமட்டுமல்லாமல் இன்றைய நாகரீக உணவுகளால் ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கு அருமருந்தாக புதினா விளங்குகிறது.

வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை,  புதினாக்கீரை பசியைத்தூண்டும், ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்ட மின்களும், தாதுப்பொருட் களும் அதிக அளவில் இருக்கின்றன  புதினாக்கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும்.

பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகிறது. ஊளைச்சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப்புழுக்களை அழிக்க இது உதவுகிறது. வாய்வுத் தொல்லையை அகற்றுகிறது.

மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக்கீரை குணப்படுத்துகிறது. 

Label