OUR CLIENTS
எல்லாம் ஒரு விளம்பரம்தான்... மக்களை ‘தவிக்க’விட்ட கட்சிகள்!
எல்லாம் ஒரு விளம்பரம்தான்... மக்களை ‘தவிக்க’விட்ட கட்சிகள்! Posted on 12-May-2017 எல்லாம் ஒரு விளம்பரம்தான்... மக்களை ‘தவிக்க’விட்ட கட்சிகள்!

மதுரை, மே. 12-
திருமங்கலத்தில் கடும் வெயிலில் தவிக்கும் மக்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்குவதாக கூறி அரசியல் கட்சியினரும், நகராட்சியும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

கடும் வெயிலால் கிராமங்களில் இருந்து திருமங்கலம் வரும் மக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். வீடுகளில் இலவசமாக தண்ணீர் கொடுத்த காலம் எல்லாம் மாறிப்போச்சு. தற்போது நீர் மோர் பந்தல் அமைத்து தண்ணீர் வழங்குவது பெரும் சமூக சேவை என்பது போல் ஆகி விட்டது.

முதலில் தே.மு.தி.க.,வினர் நீர்மோர் பந்தல் அமைந்தனர். பந்தல் அமைக்கப்பட்டதும் மக்கள் கூட்டம் மோர் குடிக்க அதிகம் கூடியது. அப்படி இருந்தும் ஒரே நாளில் மூடி விட்டனர். தற்போது பந்தலும் பேனரும் மட்டும் உள்ளது. நீரும், மோரும் இல்லை. திருமங்கலம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அமைச்சர் உதயக்குமார் சார்பில் நீர் மோர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சில நாட்களாக அங்கு நீர் மட்டுமே உள்ளது. மோரை காணவில்லை. ம.தி.மு.க.,வினர் 24வது ஆண்டு விழாவை முன்னிட்டு நீர்மோர் பந்தல் திறந்தனர். அவர்களும் ஒரே நாளில் மூடி விட்டனர். பந்தலும், பேனரும் மட்டுமே உள்ளது.

நகராட்சி சார்பில் மூன்று இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் ஊற்றப்படுகிறது. அதில் தண்ணீர் ஊற்றிய சில மணி நேரத்திலேய தீர்ந்து விடுகிறது. ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர்பந்தலிலும் எப்போதும் மோர் கிடைப்பதில்லை. ஆக, திருமங்கலம் மக்களை பந்தல் மட்டும் அமைத்து விட்டு, விளம்பரத்திற்காக தண்ணீர் தருவதாக கூறி நகராட்சியும், அரசியல் கட்சியினரும் ஏமாற்றி வருகின்றனர். மக்களின் தாகத்தை யாரும் தீர்த்ததாக தெரியவில்லை.

Label