OUR CLIENTS
திருவண்ணாமலையில் பல லட்சம் பேர் கிரிவலம்!
திருவண்ணாமலையில் பல லட்சம் பேர் கிரிவலம்! Posted on 12-May-2017 திருவண்ணாமலையில் பல லட்சம் பேர் கிரிவலம்!

திருவண்ணாமலை, மே. 12-
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில், மாதம்தோறும் பவுர்ணமி நாளில், பக்தர்கள் கிரிவலம் செல்வர்.

இந்த மாதம், சித்ரா பவுர்ணமி என்பதால், வழக்கத்தைவிட கூடுதலாக பக்தர்கள் வந்தனர். சித்ரா பவுர்ணமி, நேற்றுமுன்தினம் அதிகாலை, 12:09 மணிக்கு துவங்கி, நேற்று அதிகாலை, 3:04 மணி வரை இருந்தது. இதனால், நேற்றுமுன்தினம் மாலை, 6:00 மணி முதல், நேற்று அதிகாலை வரை, லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் சென்றவாறு இருந்தனர்.

பக்தர்கள் வசதிக்காக, 35 இடங்களில் கார் பார்க்கிங் வசதி, 12 தற்காலிக பஸ் ஸ்டாண்ட்கள் அமைக்கப்பட்டு, 2,146 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 18 இடங்களில், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், நீர் மோர், குளிர்ந்த நீர் மற்றும் தர்பூசணி பழம் வழங்கப்பட்டது.

நான்கு மணி நேரத்திற்கு மேல், வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Label