OUR CLIENTS
எவரெஸ்ட் சிகரத்தில் திருமணம் செய்த கலிபோர்னியா காதல் ஜோடி!
எவரெஸ்ட் சிகரத்தில் திருமணம் செய்த கலிபோர்னியா காதல் ஜோடி! Posted on 12-May-2017 எவரெஸ்ட் சிகரத்தில் திருமணம் செய்த கலிபோர்னியா காதல் ஜோடி!

காத்மாண்டு, மே. 12-
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த காதலர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் திருமணம் செய்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளனர். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் சிசோம் மற்றும் ஆஷ்லே ஸ்கீமேடர் தான் அந்த காதலர்கள்.

ஜேம்ஸும், ஆஷ்லேவும் தங்கள் திருமணத்தை எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்ப்பில் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து எவரெஸ்ட் சிகரத்தின்  பேஸ் கேம்ப் செல்ல இந்த காதல் ஜோடி ஒரு ஆண்டு பயிற்சி மேற்கொண்டனர். இதையடுத்து எவரெஸ்ட் சிகரத்தை அடைய இவர்கள் பயணம் மேற்கொண்டனர். 

அதன்படி எவரெஸ்ட் சிகரத்தின்  பேஸ் கேம்ப்-ஐ அடைய ஒரு வாரம். ஆகியுள்ளது. மலையேறும்போது ஜேம்ஸுக்குப் பல தடவை மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இந்தத் திட்டத்தைக் கைவிடும் சூழலுக்குக்கூட தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால் தன்னம்பிக்கையுடன் பேஸ் கேம்ப்பை அடைந்து அங்கு திருமணம் செய்து கொண்டனர்.

Label