OUR CLIENTS
தொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை!
தொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை! Posted on 12-May-2017 தொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை!

கிருஷ்ணகிரி. மே. 12-
பர்கூரில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துறை அலுவலகம் தொற்றுநோய் பரவும் இடமாக காட்சியளிக்கிறது. பன்றிகள் தங்கும் இடம்போல அந்த இடம் காட்சியளிப்பது பரிதாபத்துக்கு உரியதாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வகாத்துறை உண்வு பாதுகாப்பு துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலக கட்டடம் உள்ள இடம் பன்றிகள் வாழும் இடம் போல காட்சியளிக்கிறது. இந்த கட்டடத்தின் சுற்றுப்புறம் தொற்றுநோய் பரவும் அபாய நிலையில் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணியாற்றுவோர் எதைப்பற்றியும் கவலைப்படுவதாக தெரியவில்லை.

அந்த கட்டடத்தின் உட்பகுதியும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதற்கு காரணம் அந்த கட்டடத்தின் நிலையே மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் பணியாற்றும் இடத்தையே அவர்கள் சுத்தமாக பராமரிக்கவில்லை. இவர்கள் எப்படி சுகாதாரத்தை பற்றி மற்றவர்களுக்கு எடுத்து கூற முடியும் என்று விமர்சனம் செய்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்காமல் இப்படி மதுபான பாட்டில்கள், விஷச்சாராயம் குடித்த பாலிதீன் பாக்கெட்டுகள், ஆணுறைகள் போன்ற விரும்பத்தகாத பொருட்கள் அந்த கட்டடத்தை சுற்றி ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளன.

இவற்றை அப்புறப்படுத்த கூட இங்கு பணியாற்றுபவர்களுக்கு மனமில்லை. மனமிருந்தால்தானே மார்க்கமுண்டு. அவர்கள் பணத்தை சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். ஒரு சிலர் இந்த அலுவலகத்துக்கு சரிவர வருவதே இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த அலுவலகத்தை பராமரிப்பதில் சுணக்கம் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

உணவு பாதுகாப்பு அலுவலகத்தை பார்த்தாலே வாந்தி மயக்கம் வரும் நிலைக்கு உள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள். இந்த அலுவலகத்தை மாவட்டத்தில் உள்ள உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியராவது இதுபோன்ற பாழடைந்த நிலையில் உள்ள கட்டடங்களை பார்வையிட்டு அந்த கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுவாசம் தொடர்பான நோய்கள் இந்த கட்டடத்தின் வாயிலாக பரவ கூடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை ஒரு நல்ல இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதே இந்த அலுவலகத்தை நாடி வரும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மக்களின் நலல் கருதி மாவட்ட ஆட்சியர் இந்த அலுவலகத்தை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கிறாரா அல்லது சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label