OUR CLIENTS
ஊழியருடன் தகராறை வீடியோ எடுத்த இந்தியரின் விமான டிக்கெட் ரத்து!
ஊழியருடன் தகராறை வீடியோ எடுத்த இந்தியரின் விமான டிக்கெட் ரத்து! Posted on 13-May-2017 ஊழியருடன் தகராறை வீடியோ எடுத்த இந்தியரின் விமான டிக்கெட் ரத்து!

லாஸ்ஏஞ்சல்ஸ், மே. 13-
ஊழியருடன் ஏற்பட்ட தகராறை வீடியோ எடுத்த இந்தியரின் விமான டிக்கெட்டை அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் ரத்து செய்தது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்தவர் நவாங் ஓஷா (37). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து நியூ ஒர்லியன்ஸ் நகருக்கு யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் டிக்கெட் எடுத்தார்.

அப்போது அவர் எடுத்து வந்த ‘பேக்‘குக்கு ரூ.20 ஆயிரம் லக்கேஜ் போடப்பட்டது. ஆனால் கடந்த முறை பயணம் செய்த போது ரூ.9 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து விமான நிறுவன ஊழியர்களிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

அதை செல்போனில் வீடியோ ஆக படம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அவருக்கு ஏற்கனவே வழங்கிய டிக்கெட்டை ரத்து செய்தது. எனவே அவர் வேறு விமானத்தில் டிக்கெட் எடுத்து சென்றார்.

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஓஷா வெளியிட்டார். இது வைரலாக, பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெறுவதாக யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Label