OUR CLIENTS
காவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும்... வேப்பனப்பள்ளி காவல் நிலையம்!
காவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும்... வேப்பனப்பள்ளி காவல் நிலையம்! Posted on 13-May-2017 காவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும்... வேப்பனப்பள்ளி காவல் நிலையம்!

கிருஷ்ணகிரி, மே. 13-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது வேப்பனப்பள்ளி காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தின் மீது டிஎஸ்பி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிக்கவனம் செலுத்தாமல் இருப்பதன் மர்மம்தான் என்னவென்று தெரியவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையம் கிருஷ்ணகிரி காவல் சரக எல்லைக்குள் வருகிறது. இங்கு தற்போது காவல் ஆய்வாளராக ராஜேந்திரன் பணியாற்றி வருகிறார். இவருடன் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் என்று 10  பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்த காவல் நிலையத்தில் எப்போது பார்த்தாலும் காவலர்கள் இல்லாத நிலையே தொடர்ந்து காணப்படுகிறது.

இந்த காவல் சரக எல்லைக்குள் நடக்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு போலீசார் சரிவர இல்லாததால் அந்த சிறிய பிரச்னை பெரியளவில் கலவரமாக மாற வழிவகை செய்துவிடப் போகிறது என்ற அபாய நிலை ஏற்பட்டுள்ளது. காவலர்கள் இரவு மட்டும் வாகன சோதனை என்று சொல்லிவிட்டு 10 பேரும் ஒரே இடத்தில் நின்று கொண்டு கும்மியடிக்கின்றனர். இரவு ரோந்து பணிக்கு போலீசார் செல்வதே இல்லை. ரோந்து என்றால் என்ன என்று கேட்கும் நிலைக்கு இரவு ரோநது தள்ளப்பட்டுள்ளது. அரைகுரை போதையில் பணியாற்றிவிட்டு செல்லும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் ஒரு காவலரும் இருப்பதில்லை. அவரவர் தமது சொந்த பணிகளை மட்டுமே பார்த்து வருகின்றனர். அதாவது வசூல் வேட்டை முடிந்தால் போதும் வீட்டுக்கு சென்று மது அருந்திவிட்டு நிம்மதியாக உறங்குகின்றனர்.

இரவில் வசூல் வேட்டைக்கு தயாராகின்றனர். தினமும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நடைபெறும் ரோல்கால் கூட இங்கு நடப்பதில்லையாம். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கிருஷ்ணகிரி டிஎஸ்பி ரவிக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் குறட்டை விட்டுக் கொண்டுள்ளனர். இவர்கள் நித்திரை கலைந்தால் மட்டுமே வேப்பனப்பள்ளி காவல் நிலையத்துக்கு விமோசனம் பிறக்கும்.

புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் காவலர்கள் இல்லாததால் நீண்ட நெடிய நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த காவல் நிலையத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் முன்வர வேண்டும். பலர் காத்திருந்து காத்திருந்து பார்த்துவிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்று நேரில் புகார் மனு கொடுக்கும் அவலம் இங்கு தொடர்ந்து நிலவி வருகிறது.

ஏன் இந்த காவல் நிலைய புகார்கள் மட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வருகிறது என்று யோசிக்கவே மாட்டார்களா? என்பதுதான் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது. இருக்கும் நிலைமையை உணர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தை மற்ற காவல் நிலையங்கள் போன்று முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்கள் மணல் லாரிகள், இருசக்கர வாகனங்கள் மட்டுமே கண்களுக்கு தெரிகிறது. மற்ற எதுவும் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. வேப்பனப்பள்ளி காவல் நிலையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுக்குள் வருகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label