தடம்புரண்டு வீட்டிற்குள் புகுந்த ரயில்... பரிதாபமாக பலியான பயணிகள்! Posted on 16-May-2017
ஏதென்ஸ், மே 16
கிரேக்க நாட்டில் விரைவு ரயில் ஒன்று தடம்புரண்டு வீட்டிற்குள் புகுந்த விபத்தில் 3 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரேக்க தலைநகரான ஏதென்ஸில் இருந்து நேற்று முன்தினம் இரவு விரைவு ரயில் ஒன்று 70 பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. ஏதென்ஸ் நகருக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஜிலீமீssணீறீஷீஸீவீளீவீ என்ற நகருக்கு ரயில் பயணமாகியுள்ளது. இந்நிலையில், நகரை அடைவதற்கு சுமார் 40 மைல்கள் தூரம் இருந்தபோது திடீரென ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டுள்ளது.
ரயில் பெட்டிகள் வெளியே விழுந்து உருண்டபோது ஒரு பெட்டி அருகில் இருந்த வீட்டின் மீது பாய்ந்துள்ளது. விபத்தை நேரடியாக பார்த்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக பால்கனியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பியுள்ளார். ஆனால், ரயிலில் பயணம் செய்த 70 பயணிகளில் 3 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளதால் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் ரயில் பொருத்தப்பட்டிருந்த 5 பெட்டிகளும் தடம்புரண்டு வெளியேறியுள்ளது. உயிரிழந்தவர்கள் பற்றி எவ்வித தகவல்களையும் போலீசார் இதுவரை வெளியிடவில்லை. ரயில் விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது தெரியவராத நிலையில், இதுக் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என ரயில் நிறுவனம் உறுதியளித்துள்ளது.