OUR CLIENTS
‘புனித போர்’ என்ற பெயரில் தீவிரவாதத்தை பரப்பியதாக ஹபீஸ் சயீத் கைது!
‘புனித போர்’ என்ற பெயரில் தீவிரவாதத்தை பரப்பியதாக ஹபீஸ் சயீத் கைது! Posted on 16-May-2017 ‘புனித போர்’ என்ற பெயரில் தீவிரவாதத்தை பரப்பியதாக ஹபீஸ் சயீத் கைது!

லாகூர், மே 16-
பாகிஸ்தானில் இயங்கும் ஜமாத்-உத்-தவா தீவிரவாத இயக்க தலைவர் ஹபீஸ் சயீத். இவர் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர். இவரை ஒப்படைக்கும்படி பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கு பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

இந்த நிலையில் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். அவரது உதவியாளர்கள் 4 பேரும் கைதாகினர். கைது செய்யப்பட்ட ஹபீஸ் சயீத் அவரது 4 உதவியாளர்கள் லாகூரில் 3 நீதிபதிகள் அடங்கிய குழு முன்பு நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர். அக்குழுவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி இஜாஷ் அப்சல் கான், லாகூர் ஐகோர்ட்டு நீதிபதி ஆயிஷா ஏ மாலிக், பாகிஸ்தான் ஐகோர்ட்டு நீதிபதி ஜமால்கான் மன்டோகையில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஹபீஸ்சயீத் ‘ஜிகாத்’ ‘புனித போர்’ என்ற பெயரில் தீவிரவாதத்தை பரப்புகிறார் என கூறி கைது செய்ததாக நீதிபதிகள் குழுவிடம் பாகிஸ்தான் அரசு அறிக்கை அளித்துள்ளது. இதுகுறித்து சயீத் கூறும் போது ‘நான் காஷ்மீர் மக்கள் சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கிறேன்.

இதை தடுக்கவே என்னை கைது செய்து வீட்டு சிறையில் வைத்தனர். அமெரிக்கா, மற்றும் சர்வதேச நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக என் மீது இத்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாண அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய இருக்கிறேன் என்றார். அதை தொடர்ந்து வழக்கு விசாரணையை இன்று நீதிபதிகள் குழு ஒத்திவைத்தது. ஹபீத்சயீத் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து கோர்ட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் ஏராளமாக திரண்டு இருந்தனர்.

Label