OUR CLIENTS
மருந்து விற்ற பெண்ணிற்கு ஆறு வருட சிறை... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
மருந்து விற்ற பெண்ணிற்கு ஆறு வருட சிறை... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! Posted on 16-May-2017 மருந்து விற்ற பெண்ணிற்கு ஆறு வருட சிறை... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கனடா, மே 16-
கனடாவின் ஒன் ராறியோவில் மருந்து விற்ற குற்றத்திற்காக 21 வயது இளம்பெண்ணிற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இளம்பெண் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தண்டனை மிக கடுமையானது என தெரிவிக்கப்பட்டது. கனடாவின் வார்ட்டலூவை சேர்ந்த பிரிட்டனி தோரன் யீமீஸீtணீஸீஹ்றீ எனப்படும் சக்தி வாய்ந்த வலி நிவாரணி மாத்திரை கடத்தல் குற்றத்திற்காக வியாழக்கிழமை நீதி மன்றத்தில் ஆஜரானார்.

பாரிய அளவிலான சக்தி வாய்ந்த வலி நிவாரணியான யீமீஸீtணீஸீஹ்றீ நூற்றுக்கணக்கானவர்களின் மரணத்திற்கு வழிவகுக்கலாம் என இவருக்கான தண்டனையை வழங்கிய நீதிபதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தோரன் மற்றும் அவரது காதலன் ஹரமன்பல் சித்து இருவரும் இரகசிய போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மருந்துகளை விற்றுள்ளனர் என உண்மைகளை ஒப்புக்கொண்ட அறிக்கை ஒன்றின் படி தெரியவந்துள்ளது.

இவர்களது கிச்னர் ஒன்ராறியோ குடியிருப்பு அப்பார்ட்மென்டை போலீசார் சோதனை செய்த போது கிட்டத்தட்ட 100,000 டாலர்கள் பெறுமதியான யீமீஸீtணீஸீஹ்றீ கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோரனின் காதலருக்கு விதிக்கப்பட்ட 10-மாதங்கள் சிறைத்தண்டனை அடுத்த மாதம் அமுல் படுத்தப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Label