OUR CLIENTS
பணம் வீட்டில் தங்குவதற்கு வாஸ்து சொல்லும் வழிகள்!
பணம் வீட்டில் தங்குவதற்கு வாஸ்து சொல்லும் வழிகள்! Posted on 16-May-2017 பணம் வீட்டில் தங்குவதற்கு வாஸ்து சொல்லும் வழிகள்!

வீட்டில் காசு தங்குவதற்கு வாஸ்து சாஸ்திரம் சில வழிமுறைகளை கூறுகிறது. பணப்பெட்டி அல்லது லாக்கரை தெற்கு திசை நோக்கி வைத்தால், அது எப்போதும் காலியாத்தான் இருக்குமாம்.

அதில் வைத்து எடுக்கிற அளவுக்கு பண வருவாய் வராது. வந்தாலும் தங்காது என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். வடகிழக்கு திசையை நோக்கி பணப் பெட்டியை வைத்தால் வரவுக்கு மீறிய செலவு வரும்.

தென் கிழக்கில் பணப்பெட்டியை வைத்தால் அக்னியில் போட்ட மாதிரி உடனே கரையும். வீட்டு பூஜை அறையில் சாமி படங்களை மேற்கு திசை நோக்கி வைத்தால் கூட வரவும், செலவும் சரியாக இருக்கும். சாமி அறைதான் பணம் வைத்து எடுக்க சரியான இடம் என்று பூஜை அறையில் வைத்தீர்களானால் பணம் வருவதும், போவதுமாக இருக்கும்.

பணப்பெட்டியை அல்லது லாக்கரை வடக்கு திசை நோக்கி வைப்பது நலம், அல்லது நேர் கிழக்கு திசை நோக்கி வைப்பது இன்னும் சிறப்பு என்பது வாஸ்து அறிந்தவர்களின் வாக்கு.

Label