OUR CLIENTS
மாத வருமானம் பெறும் மகளிருக்கான கடன் முகாம்!
மாத வருமானம் பெறும் மகளிருக்கான கடன் முகாம்! Posted on 18-May-2017 மாத வருமானம் பெறும் மகளிருக்கான கடன் முகாம்!

ஈரோடு, மே 18-
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மாத வருமானம் பெறும் மகளிருக்கான கடன் முகாமினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.பிரபாகர் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மாத வருமானம் பெறும் மகளிருக்கான கடன் முகாமினை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வகுமார் சின்னையன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), வே.பொ.சிவசுப்பிரமணி (மொடக்குறிச்சி) ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.பிரபாகர் நேற்று (17.05.2017) தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.பிரபாகர் பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கி பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் இன்று மாத வருமானம் பெறும் மகளிருக்கான கடன் முகாம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.

இன்று இருக்கும் தனியார் வங்கிகளுக்கு இணையாக மத்திய கூட்டுறவு வங்கி கணினி மையமாக தன்னை மாற்றி செயல்பட்டு வருகின்றது. இவ்வங்கி அதிகமான கடனுதவிகளை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு கூட்டுறவு வங்கிகளின் சார்பில் நெசவாளர்களுக்கு கடனுதவிகளை வழங்கி அவர்களது வாழ்வாதாரம் உயர்வதற்கு பெரும் பங்கு வகித்து சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுவரை வீட்டு வசதிக்கடன் மேளா 315 நபா;களுக்கு ரூ.2793.21 லட்சம் கடன் அனுமதிக்கப்பட்டு மார்ச் 2017-ல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வீட்டு அடமானக் கடனாக 178 நபர்களுக்கு ரூ.868.50 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஜெயமகள் மாதாந்திர சிறப்புத் தொடர் வைப்புத் திட்டத்தில் 10, 500 வைப்புதாரர்கள்; இவ்வங்கியின் மூலம் சேமிப்பு கணக்கை தொடங்கியுள்ளனர். நிலையான மாதவருமானம் பெறும் அரசு, அரசு சார்ந்த மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து மகளிரும் பயன்பெறும் வகையில் மாதவருமானம் பெறும் மகளிருக்கான சிறப்புகடன் மேளா இன்று துவங்கப்பட்டுள்ளது.

இக்கடன்கள் பெறுவதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிக்காலம் இருக்கவேண்டும். பணிபுரியும் மகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்திடவும், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும் இக்கடன்  வழங்கப்படுகிறது. எளிய நடைமுறையில் குறைந்தவட்டியில் வழங்கப்படும் இக்கடன் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

மனித வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் அடிப்படையே கூட்டுறவு அமைப்பு என்று சொன்னால் அதுமிகையாகாது. சேவை அடிப்படையில் செயல்படும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் பயன்பெறும் மற்றும் கடனுதவிகள் பெறும் பயனாளிகள் சிறந்த முறையில் தங்களது தொழில் வளத்தை பெருக்கி அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்ற பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இம்முகாமில் மாதவருமானம் பெறும் மகளிருக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கான ஆணை, பணிபுரியும் மகளிர் கடன் திட்டத்தில் 3 மகளிருக்கு ரூ..5.80 லட்சம், 3 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.10.80 லட்சம் கடன் பெறுவதற்கான ஆணை, ஒரு நபருக்கு ரூ.5 லட்சத்திற்கான வீட்டுவசதி கடன் ஆணை, 2 நபர்களுக்கு சிறு வணிக கடனாக தலா ரூ.50,000-க்கான ஆணை என மொத்தம் 11 நபர்களுக்கு ரூ.24,55,000-க்கான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.பிரபாகர் வழங்கினார்.

இம்முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் வரவேற்று பேசினார். இம்முகாமில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் வி.தெய்வநாயகம், இணைப்பதிவாளர் மு.முருகன், மேலாண்மை இயக்குநர் எஸ்.

யசோதாதேவி, மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், துணைப்பொதுமேலாளர் (நபார்டு) சி.ஆர்.அபூர்வராஜன், துணைப்பதிவாளர் (ஈரோடு சரகம்), ப.மணி, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் மு.பா.பாலாஜி, மேலாண்மை இயக்குநர் பி.கந்தராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன்,  உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) தே.ராம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு பத்திரிகை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Label