OUR CLIENTS
சிங்கப்பூர் விமான நிலையத்தில் ‘திடீர்’ தீ விபத்து!
சிங்கப்பூர் விமான நிலையத்தில் ‘திடீர்’ தீ விபத்து! Posted on 18-May-2017 சிங்கப்பூர் விமான நிலையத்தில் ‘திடீர்’ தீ விபத்து!

சிங்கப்பூர், மே 18-
சிங்கப்பூரில் சாங்கி என்ற இடத்தில்  சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு நேற்று  முன்தினம் மாலை 5.40 மணியளவில்  திடீரென  தீ விபத்து ஏற்பட்டது.

விமான நிலையத்தில் 2-வது டெர்மினல் பகுதியில் ஒரு அறையில்  உள்ள ஏர்கண்டிசன்  கருவியில் இருந்து குபுகுபுவென புகை கிளம்பியது. பின்னர்  விமானம் புறப்படும் பகுதியில் உள்ள ஹாலுக்கு பரவியது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும்  ஏற்பட்டது. உடனே தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீ விபத்தை பயன்படுத்தி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல்  தடுக்க இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் விமான நிலையம் 3 மணி நேரம் மூடப்பட்டது. இதனால் அங்கிருந்து புறப்பட இருந்த 40 விமானங்களின் போக்குவரத்து  தாமதப்பட்டது. ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

சாங்கி விமான நிலையத்தில் ஏற்பட்ட  தீ விபத்தில் 7 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 3-வது டெர்மினலில் உள்ள ஆஸ்பத்திரியில்  சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 2 பேர் விமான நிலைய ஊழியர்கள்.

பாதிக்கப்பட்டவர்களில் சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த செந்தில் சண்முகமும் ஒருவர். இவர் திருச்சி செல்ல 2-வது டெர்மினலில் காத்திருந்தார். சாங்கி விமான நிலையம் வழியாக  ஆண்டுக்கு 6 கோடி பேர் பயணம் செய்கின்றனர்.

அங்கு தீ விபத்துக்குள்ளான 2-வது டெர்மினலில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்சில் மண்டல விமானங்களான சில்க்ஏர் மற்றும் டைகர் ஏர் விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன. பெரும்பாலும் அவை இந்தியாவுக்கு புறப்பட்டு செல்கின்றன.

Label