OUR CLIENTS
அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பார்சல்கள் ஏற்ற மறுக்கும் நடத்துநர்கள்!
அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பார்சல்கள் ஏற்ற மறுக்கும் நடத்துநர்கள்! Posted on 18-May-2017 அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பார்சல்கள் ஏற்ற மறுக்கும் நடத்துநர்கள்!

வேலூர், மே 18-
வேலூரில் இருந்து பல ஊர்களுக்கு செல்லும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகளில் முன்கூட்டியே பாஸ் எடுத்து அதை ஒட்டி பார்சல் அனுப்பினால், அதை ஏற்ற மறுப்பதுடன் பார்சலை வாங்க மறுப்பு தெரிவிப்பதுடன் அந்த பார்சலை வேறு எங்காவது வீசி விட்டுச் செல்லும் அலட்சியப் போக்குடன் நடத்துநர்கள் சிலர் நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

வேலூர் மாவட்டம், விழுப்புரம் கோட்டத்தில் இணைந்தது ஆகும். இந்த கோட்டத்தில் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயக்கப்படும் பேருந்துகள் அடங்குகின்றன. வேலூர் ரங்காபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் முன்கூட்டியே பணம் செலுத்தி பார்சல் அனுப்ப முன் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதை பார்சல் அனுப்புவோர் அந்த பார்சல் மீது பாஸ் விவரங்களை ஒட்டி அனுப்பினால் அரசு போக்குவரத்து கழகத்தில் நடந்துநர்களாக பணியாற்றும் சிலர் ஏற்க மறுப்பதோடு வேறு பேருந்துகளை காண்பித்து விட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். இதற்கு காரணம் பணம் கொடுத்தால் மட்டும் பல்லை இளித்து கொண்டு லக்கேஜ் ஏற்றிக் கொள்கின்றனர். ஆனால் பாஸ் என்றால் ஏற்றாதே, வேறு வண்டியை பார்த்துக் கொள் என்று கூலாக கூறி தட்டிக் கழித்து விடுகின்றனர். 

இதற்கு முன்னர் இருந்த வேலூர் மண்டல போக்குவரத்து மேலாளர் திறம்பட நிர்வாகம் செய்தார். போக்குவரத்து துறையில் TSS முறையை சிறப்பாக நடத்தினார். நடத்துநர்கள், ஓட்டுநர்களுக்கு அவ்வப்போது விதிமுறை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை வகுப்புகள் நடத்தி வந்தார். ஏதேனும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தாலும் உடனடி நடவடிக்கை எடுத்தார். அதனால்  நடத்துநர்கள், ஓட்டுநர்கள் மிக சரியாக செயல்பட்டனர்.

ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக உள்ளது.  தற்போது உள்ள  மண்டல மேலாளர் ரமேஷ் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் நடத்துநர்கள், ஓட்டுநர்கள் என்ன பணி செய்கிறார்கள் என்றே தெரியாமல் உள்ளாரா என்ற கேள்வி எழுகின்றது. ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பொதுமக்களிடமும், பார்சல் அனுப்புபவர்களிடமும் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். முறையான கட்டண பயண சீட்டும் அளிப்பதில்லை. ஒரு சிறிய பார்சல் என்றாலும் பார்சல் கட்டணம் தவிர்த்து அதைவிட கூடுதலாக இரட்டிப்பாக பணம் வசூலிக்கின்றனர்.  

குறிப்பாக இதுபோன்ற பார்சல் அனுப்ப பாஸ் இல்லாமல் பணம் கொடுத்தால் நடத்துநர்கள் விருப்பம் போல பணத்தை கூடுதலாக வாங்கிக் கொண்டு கும்மாளம் போடுகின்றனர். பாஸ் என்றால் வேறு பேருந்துகளை காண்பிப்பது, பின்னால் வரும் பேருந்துகளில் ஏற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்களாம். இல்லையென்றால் தனியாக பணம் கேட்கிறார்கள். இதுபோன்ற நடத்துநர்கள் மீது கடுமையான நடவடிக்கையை துறை வாரியாக எடுக்க அரசு போக்குவரத்து கழகம் முன்வர வேண்டும். 

குறிப்பாக கூற வேண்டும் என்றால் நேற்று முன்தினம் டிஎன் 23& என்&2008, டிஎன் 23&என்&2148 போன்ற பேருந்துகளை கூறலாம். பாஸ் உள்ளது என்பாதாலேயே பார்சலை கொடுக்காமல் பார்சல் இல்லையென்று கூறிவிட்டு, பின்பு பார்சல் வாங்க வந்தவரிடம் பணம் பெற்றுக் கொண்டு பார்சல் வழங்கியுள்ளனர். நேற்று டிஎன் 23&என்&2148 என்ற பேருந்தில் பார்சல் அனுப்பப்பட்டது. அந்த பார்சல் குறிப்பிட்ட இடத்தில் கொடுக்கவில்லை.

இது குறித்து வேலூர் போக்குவரத்து அதிகாரி ஒருவருக்கு இது தொடர்பாக அலைபேசி வழியாக பார்சல் குறித்து கேட்டதற்கு, அவர் ஆம்பூர் அதிகாரி கேசவன் என்பவருடைய தொலைபேசி எண்ணை கொடுத்தார். 9445021312 என்ற இந்த எண்ணை தொடர்பு கொண்டதற்கு எந்த மடையன் என்னுடைய எண்ணை கொடுத்தது. எனக்கு வேற வேலை இல்லையா என்று அநாகரிகமாக பதிலளிக்கிறார். பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்க மறுக்கும் கேசவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுக்கின்றது. 

இதுபோன்று பொறுப்பற்று அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட காரணமாக உள்ள நடத்துநர்கள் மீது போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் சொல்லும் காரணம் நாங்கள் நேரக்காப்பாளர் முதல், டிக்கெட் பரிசோதகர் வரை இதற்கு கப்பம் கட்டுகிறோம். ஆதலால் பார்சல் ஏற்றாதீர்கள் என்று விளக்கம் கூறுகின்றனர். பல நடத்துநர்கள் பார்சலுக்கு டிக்கெட் போடாமல் தங்கள் பாக்கெட்டில் தொகையை போட்டுக் கொள்கிறார்கள். இப்படி நடந்து கொள்வதால்தான் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுஒரு புறம் என்றால் கோட்டங்களுக்குள் பிரச்னை. இது விழுப்புரம் கோட்டம், சேலம் கோட்டம், கோவை கோட்டம், அரசு விரைவு போக்குவரத்து கழகம் என்று பிரிவுகளை கூறி சிலர் தப்பி விடுகின்றனர். ஆனால் தனியார் பஸ் முதலாளிகளிடமும், அந்த பேருந்துகளின் புரோக்கர்களிடமும் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் சிலர் மாமூல் வாங்கி கொண்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல பேருந்தை உரிய பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் சென்றுவிடுகின்றனர்.

இப்படி பல குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே போகலாம். இதில் இரவு சர்வீஸ்தான் மிகவும் மோசமானது. இதில்தான் போக்குவரத்து தொழிலாளர்கள் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதுபோன்ற குறைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தனியார் பேருந்துகள் லாபத்தில் இயங்கும் போது 24 மணி நேரமும் இயங்கும் அரசு பேருந்துகள் ஏன் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற கேள்வி மனதில் எழுகிறது.

யார் தவறு செய்தாலும் தயவு தாட்சண்யம் பாராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. விழுப்புரம் கோட்டத்தை சரி செய்தால் போதும் தமிழகத்தில் உள்ள மற்ற கோட்டங்கள் தானாக வழிக்கு வந்து விடும். போக்குவரத்து கழக உயரதிகாரிகளின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label