OUR CLIENTS
புதிய பாடத் திட்டத்தில் யோகா மற்றும் உடற்பயிற்சிகள்... பிளஸ்- 1 வகுப்பு பொதுத்தேர்வு விரைவில் அரசாணை வெளியீடு... புதிய பாடத் திட்டம் உருவாக்க நிபுணர் குழு!
புதிய பாடத் திட்டத்தில் யோகா மற்றும் உடற்பயிற்சிகள்... பிளஸ்- 1 வகுப்பு பொதுத்தேர்வு விரைவில் அரசாணை வெளியீடு... புதிய பாடத் திட்டம் உருவாக்க நிபுணர் குழு! Posted on 18-May-2017 புதிய பாடத் திட்டத்தில் யோகா மற்றும் உடற்பயிற்சிகள்... பிளஸ்- 1 வகுப்பு பொதுத்தேர்வு விரைவில் அரசாணை வெளியீடு... புதிய பாடத் திட்டம் உருவாக்க நிபுணர் குழு!

சென்னை, மே 18-
நடப்பு கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் இது தொடர்பாக முடிவு எடுத்து அரசாணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளா தமிழகத்தில் கல்வித் திட்டத்தில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டு புதிய முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து நாளை (19ந்தேதி) இதே அடிப்படையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிளஸ்-1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த அரசு முடிவு செய்து இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் கல்வி அதிகாரிகளுடன் நேற்று  நடந்த ஆலோசனைக்குப் பின் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- நடப்பு கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு  உள்ளது. இன்னும் சில நாட்களில் இது தொடர்பாக முடிவு எடுத்து அரசாணை வெளியிடப்படும். இதற்காக பிளஸ்-1 பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். நுழைவுத் தேர்வுகளை சந்திக்கும் வகையில் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. புதிய பாடத் திட்டம் உருவாக்க நிபுணர் குழு அமைக்கப்படுகிறது.

புதிய பாடத் திட்டத்தில் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன. ஆசிரியர்களுக்கும் புதிய பாடத்திட்டம் தொடர்பான பயிற்சி அளிப்பது குறித்து நாளை அரசாணை வெளியிடப்படும். தமிழ்நாட்டில் 150 நடுநிலைப்பள்ளிகள் உயர் நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் மொத்தம் 250 பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்தப்பட்டது. இதில் இருந்து ஆசிரியர்கள் காலி பணியிடங்களுக்கு நிரப்பப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் நிலவும் வெப்ப நிலை காரணமாக பள்ளிகள் மார்ச் 29-ந் தேதிக்குப் பதிலாக முன்கூட்டியே மார்ச் 21ந்தேதி மூடப்பட்டன. தொடர்ந்து வெப்பம் நீடிக்கிறது. வழக்கமாக ஜுன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும். தற்போது வெயிலால் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் பாடப்புத்தகம், மடிக்கணினி, பேக் உபகரணங்கள் போன்றவற்றில் ஜெயலலிதா படம் இடம் பெற்று இருக்கும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி ஆய்வாளர்கள் ஆலோசனை கூட்டம் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.  இதில் பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன், அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, பள்ளி கல்வி இயக்குனர் இளங்கோவன், தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம்  உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Label