OUR CLIENTS
இலவச கல்வி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
இலவச கல்வி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! Posted on 18-May-2017 இலவச கல்வி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை, மே 18-
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12 (1)  (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில்  25% இடஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்  நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறும் வகையிலும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டும் 2017-2018ம் கல்வியாண்டு முதல் 25% ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க அரசால் ஆணையிடப்பட்டது.

இதற்கானவசதி www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 40000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இச்சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிக்க 20.04.2017 முதல் 18.05.2017 வரைகால அவகாசம் வழங்கப்பட்டது.  வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு இவ்வகைச் சேர்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான கால வரையறை 26.05.2017 வரைநீட்டிக்கப்படுகிறது.

ஏற்கனவே தெரிவிக்கப்பட்டவாறு முதன்மைக் கல்விஅலுவலர் / மாவட்டக் கல்விஅலுவலர்/மெட்ரிக்குலேசன் பள்ளிகள்ஆய்வாளர்/மாவட்டத்தொடக்கக் கல்விஅலுவலர்/உதவித் தொடக்கக் கல்விஅலுவலர்/வட்டாரவள மையமேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.    மேலும் மாநிலம்   முழுவதும்  உள்ள    10,000க்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்குப்  பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேற்காணும் வழிகாட்டுதலின் படி சமுதாயத்தில் நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில்« சரும் வாய்ப்பினைபயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label