OUR CLIENTS
தரமற்ற நாப்கினால் குழந்தையின்மை!
தரமற்ற நாப்கினால் குழந்தையின்மை! Posted on 18-May-2017 தரமற்ற நாப்கினால் குழந்தையின்மை!

இனியே தோழிகளே! இன்று  மாதவிலக்கின் போது பயன்படுத்திவரும் சானிட்டரி நாப்கினால் பலபிரச்சனைகள்  உள்ளதாக ஆராய்ச்சியின் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

‘சானிட்டரி நாப்கின்களிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ‘டயாக்சின்’  பாலிகுளோரினேட்டடு டைபென்சோடையாக்சின், லிகுளோரினேட்டடு டைபென்சோ போன்ற ரசாயனம் பயன் படுத்தப்படுகிறது. டயாக்சின் மிகக்குறைந்த அளவே சேர்க்கப்பட்டாலும் அதன் பின்விளைவுகள் மிக ஆபத்தானதுதான்.

அதேபோல் இந்த ரசாயனம் உடலில் ஒட்டிக் கொள்ளக்கூடியது மற்றும்  உடலினுள் நுழையும் இந்த ரசாயனம், ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கும். இடுப்புப் பகுதியில் வீக்கம், சினைப்பைப் புற்றுநோய், நோய் எதிர்ப்புச் சக்தியை பலவீனமாக்குவது, குழந்தையின்மைக்கான வாய்ப்பை அதிகரிப்பது போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதுமட்டுமன்றி நாப்கின்கள் தயாரிக்கும் போது, செயற்கை நறுமணப் பொருட்களையும் வாசனை பொருட்களையும் சேர்ப்பதால், அவை மாதவிலக்கின் போது ரத்தத்தில் கலந்து பிறப்புறுப்புப் பகுதியில் அலர்ஜியை ஏற்படுத்திவிடுகின்றது.

பெரும்பாலும்  வெள்ளை நிறத்தில் இருக்கும் சானிட்டரி நாப்கின்களையே வாங்குவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், சானிட்டரி நாப்கின் வந்த ஆரம்ப காலத்தில் க்ரீம் நிறத்தில்தான் இருந்தன.  அதை வெண்மை யாக்க ‘டயாக்சின்’ என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.

நாப்கின்னின் மேல்பகுதி சருமத்தில் படக்கூடியது என்பதால், அது பருத்தியால் ஆனதாக இருப்பது மிகமிக அவசியம். சானிட்டரி நாப்கின்களுக்கு வாலன்டரி தரக் கட்டுப்பாடு சான்றிதழ் ஐ.எஸ்.ஐ. 5405 பெற்றிருக்க வேண்டும்.. மேலும், நாப்கின்களின் கவர் மீது ‘அன் பிளீச்டு ஒன்’ என்ற முத்திரை உள்ளதா என்று பார்த்து  நாப்கின் வாங்கவேண்டும்.

அதேபோல் நாப்கினை அதிக நேரத்துக்கு மாற்றாமல்  இருக்கும்போது அதில் பாக்டீரியா உருவாகி வயிற்றுப்போக்கு, வாந்தி, அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.  மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய மென்ஸ்டுரல் கப்ஸை (விமீஸீstக்ஷீuணீறீ சிuஜீ) பயன்படுத்துவதன் மூலம் நாப்கின்களில் இருக்கும் டயாக்சின் பக்கவிளைவு களிடமிருந்து விடைபெறலாம். ஒரு பெண் பூப்பெய்துவதில் தொடங்கி மெனோபாஸ் எனும் மாதவிலக்கு நிற்கும் வரை சுமார் 17,000 நாப்கின் பேட்களை பயன்படுத்துகின்றனர் என்கிறது ஒரு சர்வே என்பது குறிப்பிடதக்கது.

Label