OUR CLIENTS
எளிய முறையில் வீட்டு தோட்டம்... பொன்னாங்கண்ணி கீரை வளர்ப்பு!
எளிய முறையில் வீட்டு தோட்டம்... பொன்னாங்கண்ணி கீரை வளர்ப்பு! Posted on 18-May-2017 எளிய முறையில் வீட்டு தோட்டம்... பொன்னாங்கண்ணி கீரை வளர்ப்பு!

நாம், ஏரி, குளம் மற்றும் வாய்க்கால் போன்ற பகுதிகளில் பொன்னாங்கண்ணி கீரையை அதிகமாக பார்க்கலாம் பொன்னாங்கண்ணி வளர தண்ணீர் அதிகமாகத் தேவை என்பதால், மழைக்காலத்தில் நிரம்பி வழியும்  ஏரிக்கரைகளிலும், நீர்த்தேக்கங்களில் இந்தக் கீரை வளர்ந்திருக்கும். 

பொன்னாங்கண்ணி மிகுந்த மருத்துவ குணம் உள்ளது. கண்பார்வைக்கும் மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு இது நல்லது. இத்தனை குணம் மிகுந்த இதை நம் வீட்டிலேயே எளிய முறையில் செலவின்றி வளர்க்கலாம்.

பொன்னாங்கண்ணி கீரையை சமைப்பதற்காக வாங்கி, கீரைகளை கிள்ளிக் கொண்டு தண்டை வீசிவிடுகிறோம். அவ்வாறு செய்யாமல் தண்டை மட்டும் எடுத்து வையுங்கள். சற்றே பெரிய தண்டுகளைத் தேர்ந்தெடுத்து காலியாக உள்ள தோட்டத்திலோ அல்லது  மண் நிரப்பிய தொட்டிகளில் நட்டு வையுங்கள். 

மூன்று, நான்கு நாட்களில் தண்டுகளில் வேர் பிடித்து இலைகள் துளிர்க்க ஆரம்பிக்கும். சற்று கூடுதலாக தண்ணீர் விட்டு, சூரிய ஒளி நன்றாக விழும்படி தொட்டியை வைத்தால்  தண்டு நன்றாக துளிர்க்கும்.

ஒரு மாதத்தில் கீரைகளை கிள்ளி சமைக்கப் பயன்படுத்தலாம். கீரைகள் கிள்ள கிள்ள துளிர்த்துக் கொண்டே இருக்கும். தொட்டியில் நட்டால் குறைந்தது பத்து முறை தொடர்ந்து பயன்படுத்தலாம். இதுவே நிலத்தில் நட்டால் இன்னும் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம். வீணாக எரியும் தண்டை எடுத்தே வீட்டில் ஆராக்கியமான தோட்டத்தை அமைக்கலாம். 

பொன்னாங்கண்ணி கீரையின் பயன்கள் : - ரத்தத்தை சுத்தபடுத்தும், ஞாபக மறதியை போக்கி நினைவாற்றலை அதிகரிக்கும்.  நினைவாற்றல் அதிகரிக்க பொன்னாங்கண்ணி சூப் சிறந்த மருந்தாகும்.  பித்த மாறுபாட்டால் உடலில் பல நோய்கள் தாக்குகின்றன. தலைவலி, மஞ்சள் காமாலை, ஈரல் பாதிப்பு, கண் பார்வை கோளாறு உருவாகிறது. இதற்கு சிவப்பு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகும். கூந்தல் வளர தினமும் பொன்னாங் கண்ணி தைலம் தேய்த்துக் குளித்து வந்தால் நல்லது. பொன்னாங் கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். 

இதயமும் மூளையும் புத்துணர்வாக்கும். மேனியை பளபளக்கச் செய்யும்.சொறி சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கு பொன்னாங்கண்ணி சிறந்த  அறிய மருந்தாகும்.

Label