OUR CLIENTS
கைப்பக்குவம் - ராகி ஸ்பெஷல்!
கைப்பக்குவம் - ராகி ஸ்பெஷல்! Posted on 18-May-2017 கைப்பக்குவம் - ராகி ஸ்பெஷல்!

ராகி அதிரசம் :
தேவையானவை: ராகி மாவு - இரண்டரை கப், உருண்டை வெல்லம் - 2 கப், நெய் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு. 

செய்முறை: உருண்டை வெல்லத்தை மெழுகு பதத்தில் பாகு காய்ச்சி ராகி மாவில் ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். மாவு இளஞ்சூடாக இருக்கும் போது 2 கரண்டி நெய் சேர்த்து கலந்து கொள்ளவும். மாவு ஆறியதும் அதிரசங்களாக தட்டி எண்ணெயில் பொரித்-தெடுக்கவும்

ராகி லட்டு :
தேவையானவை: வறுத்த ராகி மாவு - ஒரு கப், சர்க்கரைத்தூள் - ஒண்ணேகால் கப், நெய் - கால் கப்புக்கும் சிறிது குறைவாக, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, ஒன்றிரண்டாக பொடித்த முந்திரி - தேவையான அளவு. 

செய்முறை: வறுத்த ராகி மாவு, சர்க்கரைத்தூள், முந்திரி, ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, நெய்யை சூடாக்கி ஊற்றி உருண்டைகளாக பிடிக்கவும். முந்திரிக்கு பதிலாக வறுத்து உடைத்த வேர்க்கடலையையும் சேர்க்கலாம்.

ராகி கார கொழுக்கட்டை :
தேவையானவை: ராகி மாவு - ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன்,  உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், துருவிய கேரட் - கால் கப், நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன். 

செய்முறை: ராகி மாவை இளஞ்சூடாக வறுத்துக் கொள்ளவும். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கேரட், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.  இதில் உப்பு போட்டு, வறுத்த மாவில் சேர்த்து வைக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து, 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மாவை கிளறவும். கொழுக்கட்டைகளாக பிடித்து துணி போட்ட இட்லி தட்டில் வேக வைக்கவும். ராகி மாவை வாசனை வரும்வரை வறுக்கத் தேவையில்லை. லேசாக வறுத்தாலே போதும். இப்படி வறுப்பது மாவின் கொழ கொழப்புத்தன்மையை போக்குவதற்குத்தான்!.

Label