OUR CLIENTS
விதவிதமான பொடி வகைகள்!
விதவிதமான பொடி வகைகள்! Posted on 18-May-2017 விதவிதமான பொடி வகைகள்!

வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும் சீரகப் பொடி:
தேவையான பொருட்கள்:  சீரகம் - 100 கிராம், இஞ்சி -- 50 கிராம், எலுமிச்சம் பழம் - 15 (அ) 20, ஏலக்காய் - 10 கிராம் (தோல் நீக்கியது),சீனாகல்கண்டு100 கிராம்.

செய்முறை: இஞ்சியை நன்றாக அலசி தோலை நீக்கி ‘ஜூஸ்’ எடுக்கவேண்டும். ஒரு கிண்ணத்தில் சீரகத்தை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் இஞ்சி சாறை ஊற்ற வேண்டும். தொடர்ந்து எலுமிச்சை சாறை பிழிந்து விடவேண்டும். சீரகம் நன்றாக இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் மூழ்கி இருக்கும் அளவிற்கு பார்த்துக்கொள்ளவும்.இதனை 24 மணிநேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பிறகு சீரகத்தை தனியே வடித்து எடுத்து வெயில் நேரடியாக படாத அளவில் உலர்த்த வேண்டும்(24 மணி நேரம்). மீதமுள்ள அதே இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறில் உலர்த்திய அதே சீரகத்தை போட்டு ஊறவைக்கவேண்டும். இப்படி அந்த சாறு முழுமையாக வற்றும் வரை தொடர்ந்து 5 அல்லது 6 நாள் இப்படி செய்து கொள்ளவேண்டும். உலர்த்தப்பட்ட சீரகத்துடன் ஏலக்காய், சீனா கல்கண்டு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸி / உரலில் போட்டு அரைத்து எடுக்கவும். இதனை இரண்டு தடவை சலித்து எடுக்கவும். சீரகப்பொடி தயார். 

குறிப்பு: வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து உபாதைகளுக்கும் நல்லது. மேலும் பித்தம், ஏப்பம், தலை சுற்றல் போன்றவைகளும் சரிப்படும். இதனை ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேவையான சமயத்தில் சாப்பிட வேண்டும். 

சாம்பார் பொடி :
தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய் --10 கிராம், கொத்தமல்லி -- 20 கிராம், வெந்தயம் --1 டீஸ்பூன், கடலை பருப்பு -- 1 டீஸ்பூன், பெருங்காயம் -- 1 துண்டு, கறிவேப்பிலை -- 2 இனுக்கு, தேங்காய் எண்ணைய் -- தேயான அளவு. 

செய்முறை: எண்ணையை சூடாக்கி கடலைபருப்பு மற்றும் பெருங்காயத்தை சிறு துண்டுகளாக்கி சேர்த்து கிளறவும். கடலை பருப்பு சிவப்பு நிறமானதும் கொத்தமல்லி, வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வெந்தயம் பொரியும் போது கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கிய பின் தூளாக்கவும். இது உடனடியாக செய்யக்கூடிய சாம்பார் பொடி. நல்ல ருசியான காரமான சாம்பார் பொடி.

கறிவேப்பிலை பொடி - 3
தேவையான பொருட்கள்: இளசான கறிவேப்பிலை - 2 கப், மிளகு - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயம் - 1/4 டீஸ்பூன், புளி - சுண்டைக்காய் அளவு, உப்பு -தேவையான அளவு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 1/2 டீஸ்பூன், கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன்

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி,கொத்தமல்லி விதை போட்டு வறுக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலையை அதில் போட்டு லேசாகப் பிரட்டவும். அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும் -

Label