OUR CLIENTS
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே திடீர் மரணம்... பிரதமர் மோடி இரங்கல்!
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே திடீர் மரணம்... பிரதமர் மோடி இரங்கல்! Posted on 19-May-2017 மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே திடீர் மரணம்... பிரதமர் மோடி இரங்கல்!

புதுதில்லி, மே 19-
மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி அனில் மாதவ் தவே நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரியாக பதவி வகித்தவர் அனில் மாதவ் தவே. மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார்.

இந்நிலையில், அனில் மாதவ் தவே நேற்று  திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60. அவரது உடல் டெல்லியில் இருந்து சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்படுகிறது.

மத்திய மந்திரி அனில் மாதவ் தவே மறைவு குறித்த தகவலை பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் வாயிலாக   இரங்கல் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அனில் மாதவ் தவே மறைவு தனக்கு தனிப்பட்ட இழப்பு என குறிப்பிட்டுள்ள மோடி, மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவர் தவே என புகழாரம் சூட்டியுள்ளார்.

அனில் மாதவ் தவேயின் வாழ்க்கைக் குறிப்பு...
அனில் தவே 1956ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி மாவட்டத்தில் பட்நகரில் பிறந்தார். தாய் புஷ்பா தேவி - தந்தை மாதவ் தவே. இந்தூர் குஜராத் கல்லூரியில் வணிகவியலில் முதுநிலைப்பட்டம். கல்லூரிக் காலங்களிலேயே அரசியலில் ஈடுபாடு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினார்.

ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்த அனில் தவே நர்மதா நதி இணைப்பிற்காக போராடினார். 2009ம் ஆண்டில் இருந்து மத்திய பிரதேசத்தின் ராஜ்ய சபா உறுப்பினராக நாடாளுமன்றத்தில் பணியாற்றினார். 2016ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக (தனி பொறுப்பு) பொறுப்பேற்றார். 2017ம் ஆண்டு மே 18ம் நாள் உடல் நலக்குறைவால் மரணம்.

Label