OUR CLIENTS
எடப்பாடி பழனிச்சாமி அரசு எங்களால் கவிழாது... ஓ.பன்னீர்செல்வம்!
எடப்பாடி பழனிச்சாமி அரசு எங்களால் கவிழாது... ஓ.பன்னீர்செல்வம்! Posted on 19-May-2017 எடப்பாடி பழனிச்சாமி அரசு எங்களால் கவிழாது... ஓ.பன்னீர்செல்வம்!

மதுரை, மே 19-
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எங்களால் கவிழாது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

திண்டுக்கல்லில் நேற்று முன்தினம்  நடந்த அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி பொதுக்கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றார்.நேற்று மதியம் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.

அப்போது அவரிடம் நிருபர்கள், எடப்பாடி பழனிச்சாமி அரசு இன்னும் 2 மாதத்தில் கவிழும் என்று மதுசூதனன் கூறியுள்ளாரே. உங்கள் கருத்து என்ன? என்று கேட்டனர். அதற்கு ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அரசு எங்களால் கவிழாது. அப்படி ஒரு சூழ்நிலையும் வராது என்றார்.

Label