OUR CLIENTS
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வாகனங்கள் முதல்வர் தொடங்கி வைத்தார்!
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வாகனங்கள் முதல்வர் தொடங்கி வைத்தார்! Posted on 19-May-2017 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வாகனங்கள் முதல்வர் தொடங்கி வைத்தார்!

சென்னை, மே 19-
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி   நேற்று (18.5.2017) தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப  நலத்துறை சார்பில் ‘108’ ஆம்புலன்ஸ் சேவைக்காக 3 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 25 புதிய வாகனங்கள், `102’ தாய் சேய் நல வாகன சேவைக்காக 86 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 10 புதிய வாகனங்கள் ஆகியவற்றின் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

சாலை விபத்துகளில் ஒவ்வொரு ஆண்டும் விலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகள்ஏ ற்படுகின்றன.  இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள், பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாவதோடு, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரை இழந்து, பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகின்றனர்.

புரட்சித் தலைவி அம்மாஅவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, விபத்துக்களை குறைக்கவும், உயிர் இழப்புகள் ஏற்படாமல் இருக்கவும் ‘108’ ஆம்புலன்ஸ் சேவை, விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், தலைக்காய பிரிவுகளை வலுப்படுத்துதல்,  போன்ற பல்வேறு திட்டங்களைசெயல்படுத்திவருகிறது. ‘108’ ஆம்புலன்ஸ் சேவைதிட்டத்தில் தற்போது 855 அவசரகாலவாகனங்கள் இயங்கி வருகிறது.  ‘108’ ஆம்புலன்ஸ் சேவையை கடந்த ஆறு  ஆண்டுகளில் 12.13 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட 48.19 லட்சம் நபர்கள்பயன்படுத்தி உள்ளனர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ‘108’ ஆம்புலன்ஸ் சேவையைமேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயரியநோக்கில், ‘108’ ஆம்புலன்ஸ் சேவைக்காக 3 கோடியே 55 லட்சம் ரூபாய்மதிப்பீட்டிலான 25 புதியவாகனங்களின் சேவையை தமிழ்நாடு முதல்வர்   எடப்பாடிகே. பழனிசாமி  நேற்று கொடியசைத்துதுவக்கி வைத்தார்கள்.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள்மற்றும் சேய்களை இல்லத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லவும், ஒருவயதிற்குட்பட்ட உடல் நலம் குன்றிய குழந்தைகளை, சிகிச்சை முடிவடைந்த பிறகு அல்லதுதடுப்பூசி அளிக்கப்பட்ட பின் வீடு  ம்பும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களை இல்லத்திற்குஅழைத்து செல்லவும், அரசு மருத்துவமனைகளில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்பவர்களை அவர்களின் இல்லத்திற்கு அழைத்து செல்லவும், ‘102’ தாய்சேய் நலவாகன சேவைத் திட்டம் புரட்சித் தலைவிஅம்மா அவர்களால் 2013-ஆம் ஆண்டு சென்னை மாநகரில் முதலில் தொடங்கி வைக்கப்பட்டு, பின்னர் இந்ததிட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.  இத்திட்டத்தில்தற்போது 61 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த`102’ தாய்சேய்நல வாகன சேவையை மேம்படுத்தும் வகையில், சென்னை, காஞ்சிபுரம்,  வள்ளூர், கடலூர்,  வண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக 86 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய்மதிப்பீட்டிலான 10 புதியவாகனங்களின் சேவையைதமிழ்நாடுமுதல்வர்  .எடப்பாடிகே. பழனிசாமி  நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

இந்தநிகழ்ச்சியின்  போது, தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி , ‘108’ ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் `102’ தாய்சேய் நலவாகனம் ஆகியவாகனங்களின் உள்ளே சென்று, அவ்வாகனங்களில்  அவசரகாலமுதலுதவி சிகிச்சைக்காக பொருத்தப்பட்டுள்ள கருவிகள்மற்றும் இதர வசதிகளை பார்வையிட்டார்கள்.

மேற்கண்ட 35 புதிய வாகனங்களிலும் புவியியல் தகவல் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ‘108’ ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டு, விபத்துபகுதிகளுக்கு வாகனங்களை உடனடியாக அனுப்பிடஇயலும்.

இந்தநிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறைஅமைச்சர்   சி. விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜாவைத்தியநாதன்,  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறைமுதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநில நலவாழ்வு குழுமத்தின் குழும இயக்குநர்   டேரஸ் அகமது, மற்றும் அரசு உயர் அலுவலர்கள்க லந்துகொண்டனர்.

Label