OUR CLIENTS
ரஷ்யாவிடம் டிரம்ப் என்ன ரகசியத்தை கூறினார்? உண்மையை போட்டுடைத்த புடின்!
ரஷ்யாவிடம் டிரம்ப் என்ன ரகசியத்தை கூறினார்? உண்மையை போட்டுடைத்த புடின்! Posted on 19-May-2017 ரஷ்யாவிடம் டிரம்ப் என்ன ரகசியத்தை கூறினார்? உண்மையை போட்டுடைத்த புடின்!

ரஷ்யா, மே 19-
ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்திப்பில் எந்தவொரு ரகசியமும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை என ரஷ்யா ஜனாதிபதி புடின் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்கய் லாவ்ராவ் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு சென்று ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பற்றிய பல ரகசியத் தகவல்களை இருவரும் பரிமாறிக்கொண்டதாக பல அமைப்புகள் குற்றம்சாட்டின.

மேலும், பல ரகசிய தகவல்களை ரஷ்யாவிடம் அமெரிக்கா கூறியது எனவும் புகார்கள் எழுந்தன.

இந்த குற்றசாட்டுகளை லாவ்ராவ் மறுத்து வந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறுகையில், டிரம்புடன் எங்கள் வெளியுறவு துறை அமைச்சர் சந்திப்பின் போது எந்தவொரு ரகசியத்தையும் பரிமாறி கொள்ளவில்லை.

மேலும், இதுதொடர்பான உரையாடல் பதிவுகள் தேவைப்படும் பட்சத்தில் அமெரிக்காவின் எதிர்க்கட்சிகளிடம் கொடுக்கத் தயாராக இருப்பதாக புடின் கூறியுள்ளார்.

Label