OUR CLIENTS
ஆப்கன் அரசு தொலைக்காட்சி நிறுவனம் மீது தற்கொலைப்படை தாக்குதல்!
ஆப்கன் அரசு தொலைக்காட்சி நிறுவனம் மீது தற்கொலைப்படை தாக்குதல்! Posted on 19-May-2017 ஆப்கன் அரசு தொலைக்காட்சி நிறுவனம் மீது தற்கொலைப்படை தாக்குதல்!

ஜலலாபாத், மே 19-
ஆப்கன் டி.வி மற்றும் ரேடியோ மையத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 4 பேர் நேற்று முன்தினம் நுழைந்தனர். அதில் இருவர் தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர், 14 பேர் காயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானின் நங்கர்கர் பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.

இங்குதான் அமெரிக்கப்படை கடந்த மாதம் மிகப் பெரிய குண்டை வீசியது. நங்கர்கர் தலைநகரான ஜலலாபாத்தில் ஆப்கானிஸ்தானின் டி.வி மற்றும் ரேடியோ ஒளிப்பரப்பு நிலையம் உள்ளது. இங்கு தற்கொலைப்படை தீவிரவாதிகள் 4 பேர் நேற்று நுழைந்தனர். அதில் இருவர் தங்கள் உடலில் இருந்து குண்டை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 2 பேர் பலியாயினர் 14 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க மற்றும் ஆப்கன் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், அவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்திலிருந்து 800 ஆக குறைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தற்போது 8,400 அமெரிக்க வீரர்களும், 5 ஆயிரம் நேட்டோ வீரர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அங்கு தலிபானுக்கு எதிராக போரிட இன்னும் சில ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பும்படி அதிபரிடம் பென்டகன் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Label