OUR CLIENTS
கிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு மாங்கனி கண்காட்சி நடத்தப்படுமா?
கிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு மாங்கனி கண்காட்சி நடத்தப்படுமா? Posted on 19-May-2017 கிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு மாங்கனி கண்காட்சி நடத்தப்படுமா?

கிருஷ்ணகிரி, மே 19-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்த ஆண்டு மா விளைச்சல் குறைந்துள்ள நிலையில், அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி, ஜூலை மாதம் வரை, அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படும். 24 ஆண்டுகளக்கு முன் திருமண மண்டபத்தில் நடந்த இந்த கண்காட்சி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால், திறந்த வெளிக்கு மாற்றப்பட்டது.

கண்காட்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமன்றி, தமிழகத்தில் பிற மாவட்டங்களில் விளையும் மாங்கனிகள், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அதில் சிறந்த மாங்கனிகளை விளைவித்த விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும். மேலும், கண்காட்சியில் மா சாகுபடி மற்றும் மாவில் இருந்து மாங்கூழ் தயாரித்தல் போன்ற செயல்முறை விளக்கங்களும் செய்து காண்பிக்கப்படும்.

ஆண்டுதோறும், 20 நாட்களுக்கு மேல் நடத்தப்படும் மாங்கனி கண்காட்சியில், அரசு துறை அரங்குகள் அமைக்கப்படுவதோடு, விளைறயாட்டு பொழுது போக்கு சாதனங்களும் அமைக்கப்படும். நுழைவு கட்டணமாக, ஒருவருக்கு, ஐந்து ரூபாய் வசூலித்த போதிலும், இந்த கண்காட்சியை, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர். இந்நிலையில், இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மா விளைச்சல், 70 சதவீதம் பாதிக்கப்பட்ட நிலையில், மாங்கனி கண்காட்சி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நடப்பாண்டில் மாங்கனி கண்காட்சி நடத்துவது குறித்து கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதனால், மாங்கனி கண்காட்சி நடத்துவதற்கான சூழ்நிலை உள்ளது. ஆனால், அரசியல் சூழ்நிலையால், எது வேண்டுமானாலும் நடக்கலாம்‘ என்றனர்.

Label