OUR CLIENTS
கந்தனேரியில் உள்குத்து வேலையில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ... டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி போராடிய 24 பேர் மீது வழக்கு!
கந்தனேரியில் உள்குத்து வேலையில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ... டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி போராடிய 24 பேர் மீது வழக்கு! Posted on 19-May-2017 கந்தனேரியில் உள்குத்து வேலையில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ... டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி போராடிய 24 பேர் மீது வழக்கு!

வேலூர், மே 19-
வேலூர் மாவட்டம், கந்தனேரியில் 3 டாஸ்மாக் கடைகளை கட்டாயப்படுத்தி காவல் துறை உதவியுடன் திணித்து திறந்துள்ளனர். உயர்நீதிமன்றம் பொதுமக்களுக்கு விருப்பமில்லாத பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் கந்தனேரியில் வேலு(40) என்பவர் கடை கட்டி வாடகை விட்டு வருகிறார். இவரது கடையில் 3 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.

இவர் பகல் இரவு நேரங்களில் டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை அதாவது ரூ.30 உயர்த்தி விற்பனை செய்து வருவதாக அந்தப்பகுதிவாழ் பொதுமக்கள் கூறுகின்றனர். இவர் காவல் நிலைத்துக்கு மாமூல் கொடுத்து வருகிறார். இதனால் போலீசார் இவரை கண்டுகொள்வதில்லை என்று கூறப்படுகிறது. அண்மையில் கந்தனேரி பொதுமக்கள் டாஸ்மாக் மதுபான கடையை வைக்க எதிர்ப்பு தெரிவித்து கடையை சூறையாடினர். இதனால் 5 பெணகள் உட்பட 24 பேர் மீது பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒவ்வொருவராக கைது செய்து வருகின்றனர். 

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு காற்றிலே பறக்க விடப்பட்டுள்ளது. போராட்டம் நடந்த போது அந்த இடத்துக்கு வந்த அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ நந்தகுமாரை பொதுமக்கள் விரட்டியடித்தனர். இதனால் 2 நாள் கழித்து பார்த்து கொள்ளுங்கள் என்று போலீசாரிடம் கூறிவிட்டு சென்றாராம் எம்எல்ஏ நந்தகுமார். இப்போது போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வேலு மீது இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகொண்டாவில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் கவிதா வேலுவின் உறவினர் ஆவார். இதனால் கூட்டு கொள்ளையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. 

நந்தகுமாரை போனில் தொடர்பு கொண்டால் அவர் போனை எடுப்பதே இல்லையாம். இப்படி தொகுதி மக்களை பழிவாங்கும் நோக்கோடு உள்குத்து வேலையில் ஈடுபடுவதாக நந்தகுமார் மீது தொகுதி மக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். கட்சி பாகுபாடு உள்ளிட்ட பல தாக்கம் நந்தகுமர் எம்எல்ஏ மனதில் இருப்பதாகவும், இதை இப்போது பழிவாங்க பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வருவோர் அதே மக்கள் ஆபத்தில் உள்ளபோது கழற்றிவிட்டு விட்டு அமைதி காக்கும் நந்தகுமார் போன்றோரது செயல் தொகுதி மக்களுக்கு கடும் எரிச்சலை ஊட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் மீது உரிய விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். காவல் துறையில் பணியாற்றி கொண்டு இதுபோன்று கள்ள மார்க்கெட்டில் மதுவிற்பனை செய்யும் நபரோடு கைகோர்த்து செயல்படும் காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் முன்வர வேண்டும். மாவட்ட காவல் கண்ககாணிப்பாளரின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label