OUR CLIENTS
சேவை வரி குறித்த விழிப்புணர்வு கூட்டம்!
சேவை வரி குறித்த விழிப்புணர்வு கூட்டம்! Posted on 19-May-2017 சேவை வரி குறித்த விழிப்புணர்வு கூட்டம்!

தருமபுரி, மே 19-
தருமபுரி அருகே பாலக்கோட்டில் மத்திய சுங்கம் கலால் மற்றும் சேவை வரித்துறை, வணிகவரித்துறை இணைந்து விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வாசவி மஹாலில் நேற்று மாலை வணிகர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தருமபுரி மத்திய சுங்கம் கலால் மற்றும் சேவை வரித்துறை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி, பாலக்கோடு வணிகவரி அலுவலர் எத்திராஜ் தலைமை வகித்தார். வணிகர் சங்கத் தலைவர் தர்மன் வரவேற்றார்.

சேலம்  மத்திய சுங்கம் கலால் சேவை வரித்துறையினர்  குமார், ராஜசேகர் சிற்புரையாற்றினார். அதில், மந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரித்திட்டத்தில் 70 சதவீதம் வணிகர்களை இணைத்து கொண்டுள்ளனர். மீதமுள்ள 30 சதவீதம்  வணிகர்களையும் உடனடியாக இணைந்துகொள்ள வேண்டும். இந்த புதிய வரி திட்டத்தில் ஆண்டுக்கு, 20 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்பவர்கள் மட்டுமே கணக்கு தாக்கல் செய்திட வேண்டும்.

இந்த வரி விதிப்பு முறையினால்  வணிகர்கள் அவர்களது கணக்குகளை கையாளுவதில் ஏற்படும் சிரமங்கள் குறையும். தவிர, உள்ளூர் சில்லறை வணிகர்களின் வர்த்தகமும், லாபமும் உயருவதுடன் வேலை வாய்ப்பும் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் அதிகமான வணிகர்களும் பயனடைவார்கள்.  மேலும் இத்திட்டதின் பயன்களை உணர்ந்து செயல்பட வேண்டும்.

வரும் ஜூலை மாதம் இந்த புதிய வரித்திட்டத்தின் செயல் வடிவம் பெற்றுவிடும் என அதிகாரிகள் பேசினார். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் வணிகர்கள் எப்படி இத்திட்டத்தை கையாளுவது குறித்த கானொலி திரையின் மூலமும் அதிகாரிகள் விளக்கினார். இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.

Label