OUR CLIENTS
கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டுகோள்!
கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டுகோள்! Posted on 19-May-2017 கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டுகோள்!

உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை மாற்ற வலியுறுத்துமாறு, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கு, ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், தாம் ரஞ்சிக் கோப்பைக்காக விளையாடிய போது தம்முடைய சக வீரர்கள் கடுமையான நிதிச்சூழலில் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர்களுடைய ஊதியம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை திருத்தி அமைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகழும் பி.சி.சி.ஐ. தான், ரஞ்சிக் கோப்பை போட்டிகளை நடத்துவதாக ஹர்பஜன் சாடியுள்ளார். எனவே வரும் 21ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழுவுடனான ஆலோசனையில், தமது கோரிக்கைகளை முன்வைக்குமாறு ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

Label