OUR CLIENTS
அரசு / தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சி வகுப்புகளில் 2017-2018ஆம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு!
அரசு / தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சி வகுப்புகளில் 2017-2018ஆம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு! Posted on 19-May-2017 அரசு / தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சி வகுப்புகளில் 2017-2018ஆம் ஆண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு!

கடலூர், மே 19-
அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்வதற்காக விண்ணப்பங்கள் Online வழியாக வெளியாகியுள்ளது.

கடலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (Nodal ITI) 2017ம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்வதற்காக ஆகஸ்ட் 2017 கல்வியாண்டு முதல் Online வழியாக www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கு கடைசி தேதி 31.05.2017 ஆகும். எனவே, பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் மேற்காணும் இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. சேர்க்கை தொடர்பாக விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட கலந்தாய்வுக்கான நிகழ்ச்சி நிரலும் www.skilltraining.tn.gov.in இதே இணையதலத்தில் பின்னர் வெளியிடப்படும்.

மேலும், ஓவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விபரமும் தரப்பட்டுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெற வேண்டுமாய் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

இது தொடர்பான விரிவான விவரங்களுக்கு கீழ்க்கண்ட Nodal ITI முதல்வரை தொடர்பு கொள்ளலாம்.
அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கடலூர்
தொலைபேசி: 04142/290273

Label