OUR CLIENTS
வசூல் வேட்டையில் திளைக்கும் திருவள்ளூர் பிஆர்ஓ தனபால்!
வசூல் வேட்டையில் திளைக்கும் திருவள்ளூர் பிஆர்ஓ தனபால்! Posted on 11-May-2017 வசூல் வேட்டையில் திளைக்கும் திருவள்ளூர் பிஆர்ஓ தனபால்!

திருவள்ளூர், மே 11-
செய்தியாளர்கள் பெயரைச் சொல்லி வசூல் வேட்டையில் திளைக்கிறார் திருவள்ளூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால். இவர் மீது பல புகார்கள் சென்ற வண்ணம் இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் என்றாலே சென்னையை ஓட்டினாற் போல் உள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளும் சென்னையில் பணியாற்றுவதை போன்று காணப்படுகிறார்கள். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலராக பணியாற்றி வரும் தனபாலைப் பற்றி நாம் அறியாத பல தகவல்கள் உள்ளன. இவர் உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் அஸ்வின் என்பவருடன் இணைந்து மெகா வசூல் வேட்டை நடத்தி வருகிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஆட்சியர் சுந்தரவல்லி மற்றும் செய்தியாளர்கள் பட்டியலை காண்பித்து விழா ஏற்பாடு செய்பவர்களிடம் ஒரு பெருந்தொகையை கறந்து விடுகிறார் இந்த பிஆர்ஓ தனபால்.

அரசு விழாக்கள் மற்றும் ஆட்சியர் செல்லும் விழாக்கள், நிகழ்ச்சிகள் தொடர்பான செய்திகளை செய்தியாளர்களுக்கு தெரிவிப்பதே இல்லை. மாறாக இவர் மட்டும் சென்று செய்தி மற்றும் புகைப்படம் சேகரித்து கொண்டு வந்துவிடுவார். அங்கு விழா ஏற்பாட்டளர்களிடம் கட்டிங் வாங்கிக் கொண்டு வந்து விடுகிறார். செய்தியாளர்களுக்கு அவரவர் மெயிலில் செய்தி மற்றும் புகைப்படங்களை அனுப்பி விட்டு மொத்த பணத்தையும் ஸ்வாகா விட்டு விடுகிறார் பலே கில்லாடி பிஆர்ஓ. அதுமட்டுமல்லாமல் பிரஸ் டூர் தொடர்பான தகவல்களை அவரக்கு ஜால்ரா அடிக்கும் கூஜா தூக்கும் பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் தகவல் தெரிவித்து விட்டு மற்ற செய்தியாளர்களுக்கு அல்வா கொடுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார் இந்த கில்லாடி பிஆர்ஓ.

இவரது ஆட்டம் ஓவராக இருப்பதாக சக பத்திரிகையாளர்கள் குமுறுகின்றனர். பத்திரிகையாளர்களுக்கு சேவை செய்ய வேண்டிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இவர் என்னமோ இவரது வீட்டில் இருந்து எடுத்து வந்து கொடுப்பது போன்று பிரஸ் ஸ்டிக்கர், பஸ் பாஸ், அரசு அங்கீகார அடையாள அட்டை என்று எதையும் பெற்றுத்தருவது இல்லை.

எழுதப்படாத சட்டங்கள், அறிவிக்கப்படாத அறிவிப்புகள் பிஆர்ஓவால் செய்தியாளர்களிடம் அறிவிக்கப்படுகிறது. செய்தியாளர்கள் பெயரைச் சொல்லி இவர் கல்லா கட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால் செய்தியாளர்களுக்கு சேர வேண்டிய முறைப்படியான சலுகைகளை பெற்றுத்தர இவர் முன்வருவதில்லை. அரசு செய்தியாளர்களுக்கு தரும் சலுகைகளை தட்டிப்பறிக்க இவர் யார்? என்பது தெரியவில்லை. அந்தளவுக்கு அதிகாரம் படைத்தவரா இந்த பிஆர்ஓ. செய்தியாளர்களுக்கு சேவை செய்ய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு அரசு அலுவலர்தான் இந்த பிஆர்ஓ என்பதை மறந்து செய்தியாளர்களையே கிள்ளுக்கீரையாக நடத்துகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதற்கெல்லாம் காரணம் மாவட்ட ஆட்சியர் பிஆர்ஓ எப்படி செயல்படுகிறார், அரசு திட்டங்கள், அறிவிப்புகளை பத்திரிகைகளுக்கு கொண்டு போய் சேர்க்கிறாரா? செய்தியாளர்கள், பிஆர்ஓ உறவு எப்படி உள்ளது என்பது குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் ஆட்சியர் சுந்தரவல்லியோ வேலூரில் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றியது போலவே இன்னமும் நமக்கென்ன என்று கடமைக்கு பணியாற்றி வருகிறார்.

செய்தியாளர்களை அழைத்து அவர்களுக்கு பிஆர்ஓ இழைக்கும் அநீதிகளை களைந்தெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வேறு பிஆர்ஓ மாற்றித்தருமாறு அரசு கவனத்துக்கு கொண்டு செல்வதுதான் ஆட்சியரின் கடமையாகும். பந்தா பரமசிவம் போன்று செயல்படும் பிஆர்ஓ தனபாலை குறைந்தபட்சம் துறை சார்ந்த விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். தமிழக அரசும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், செய்தி மக்கள் தொடர்பு துறையும் என்னதான் நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label