OUR CLIENTS
கிருஷ்ணகிரி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி கட்டடம் இல்லாமலே சேர்க்கை நடக்கும் அவலம்!
கிருஷ்ணகிரி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி கட்டடம் இல்லாமலே சேர்க்கை நடக்கும் அவலம்! Posted on 09-May-2017 கிருஷ்ணகிரி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி கட்டடம் இல்லாமலே சேர்க்கை நடக்கும் அவலம்!

கிருஷ்ணகிரி, மே 9-
கிருஷ்ணகிரியில் பள்ளி கட்டம் கட்டாமலே சேர்க்கை நடக்கும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை பள்ளி கல்வி துறை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணகிரியில் வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளி என்ற பெயரில் போர்டு வைத்துள்ளனர். ஆனால் அவசர கதியில் மாணவர் சேர்க்கை மட்டும் நடந்து வருகிறது. இதேபோன்று அவசர கதியில் வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள கோரந்தாங்கலில் கட்டப்பட்ட பள்ளி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஒரு கட்டட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இந்த பள்ளி கட்டடத்தை கட்டிய ஆர்க் பில்டர்ஸ் கட்டட காண்ட்ராக்டர் காட்பாடி நித்யகுமார் கைது செய்யப்பட்டார். இந்த விபத்துக்கு பின்னால் அவரது மனைவியும் தூண்டுகோலாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவசர கதியில் அந்த பள்ளி  கட்டடம் கட்டப்பட்டதே அந்த விபத்துக்கு காரணமாக அமைந்தது. 

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இப்போது அவசர கதியில் இந்த பள்ளி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் பள்ளியில் திறந்தவெளியில் வகுப்பறைகள் உள்ளதால் கொசுத்தொல்லை அதிகளவில் காணப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு விஷக்காய்ச்சல் பரவும் பேராபத்து உள்ளது என்று பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். அத்துடன் பள்ளி கட்டணம் வசூலிக்கும் போது அரசு நிர்ணயித்த தொகையை வாங்காமல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதற்கு அவர்கள் தரும் ரசீது ஒரு தொகைக்கு தரப்படுகிறது. ஆனால் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது. இப்படி தான்தோன்றி தனமாக பள்ளி நடத்தப்படுகிறது. நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்த பிறகும் அந்த உத்தரவை மீறி பள்ளியில் ஷூ, சாக்ஸ், சட்டை, டிரவுசர் துணிவகைகள் விற்பனை படுஜோராக நடக்கிறது. பள்ளி கட்டடம் இடிந்து விழுந்தால் விலைமதிப்பில்லாத பிஞ்சுகள் மரணத்தை தழுவும் பேராபத்து நிகழும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

இதுபோன்ற பள்ளி கட்டடங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு நடத்த முன்வர வேண்டும். லாப நோக்கில் கல்வியை கற்றுத்தர முடியாது. இதை விடுத்து முழுவதும் சேவை நோக்கில் மட்டுமே பள்ளியை நடத்த வேண்டும் என்ற விதி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்த பள்ளிக்கு எத்தனை மாணவர்கள் எந்தெந்த வகுப்புகளில் சேர்க்கலாம், 25% சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதா? என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

இதுபோன்ற குறைபாடுகள் இல்லாமல் பார்த்து கொள்ள கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். மழலைகளை நம்பி இதுபோன்ற பள்ளிகளுக்கு அனுப்பினால் அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் போகும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற அவலங்கள் இல்லாமல் களையப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் போன்றோர் இருக்கையில் அமர்ந்து கொண்டு சுகம் காணாமல் களத்துக்கு நேரடியாக சென்று பள்ளிகளில் ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்று ஸ்தல ஆய்வு நடத்த வேண்டும். அப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடும் பெற்றோர் தங்களது குழந்தைகளை நம்பி இதுபோன்ற தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தவாவது முன்வருவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label