OUR CLIENTS
பள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களுக்கு பதில் செவிலியர்கள் பணியாற்றும் கொடூரம்!
பள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களுக்கு பதில் செவிலியர்கள் பணியாற்றும் கொடூரம்! Posted on 08-May-2017 பள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களுக்கு பதில் செவிலியர்கள் பணியாற்றும் கொடூரம்!

காட்பாடி, மே 8-
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள பள்ளிக்குப்பத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் மருத்துவர்களுக்கு பதிலாக செவிலியர்கள் மருத்துவம் பார்க்கும் கொடூரம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதை களைய யாரும் நடவடிக்கை எடுத்தபாடில்லை.

வேலூர் மாவட்டம் என்றாலே வளமான மாவட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். கல்வியறிவு மட்டுமே குறைவு. ஆனால் மற்ற வசதிகளுக்கு எந்த குறைவும் இல்லை. இந்நிலையில் இந்த மாவட்டத்தில் பல தில்லாலங்கடி பேர்வழிகள் அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பத்தில் அதாவது வேலூர் மாநகராட்சி 2&வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேர பிரசவம் பார்க்கும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இங்கு பணியாற்றுவோர் கடமைக்கு ஒருவர் மட்டும் செவிலியர் மட்டும் பணியில் இருப்பார். மற்றவர்கள் 2 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றுவது இல்லை. மருத்துவர்கள் வாயில் மாஸ்க் எனப்படும் முகமூடியை கட்டிக் கொண்டு பணியாற்றுகின்றனர். இவர்கள் இங்கு வரும் நோயாளிகளின் கைகளை பிடித்து பார்ப்பது இல்லை. ஸ்டெதாஸ்கோப் கொண்டு மூச்சை இழுத்துவிடச் சொல்லி பார்ப்பது இல்லை. இப்படி தொட்டு கூட பார்க்காமல் நோயாளிகள் என்ன சொல்கிறார்களோ அதை செவி வழியே கேட்டுக் கொண்டு கடமைக்கு ஏதோ மருந்துகளை எழுதி கொடுத்து விட்டு அனுப்பி விடுகின்றனர். 

கால்நடைகளை கூட கால்நடை மருத்துவர்கள் தொட்டு பார்த்து மருந்து மாத்திரை வழங்கி வருகின்றனர். ஆனால் இஙகு மனிதர்களை மனிதர்களாக கூட மதிப்பது இல்லை. புகார் சொன்னால் சுகாதாரப் பணிக் துறை இணை இயக்குனர் சுரேஷ் கண்டுகொள்வதில்லை. இங்கு வரும் இருமல், சளித் தொல்லைக்கு வழங்கப்படும் மருந்துகளை வெளியில் விற்பனை செய்து விடுவதாக இந்தப்பகுதி மட்டுமல்லாமல் பெரியபுதூர், கன்சாலூர், கல்புதூர் போன்ற பகுதிவாழ் மக்களும் புகார் தெரிவிக்கின்றனர். இப்படி பல மருந்துகள் வெளியில் கொண்டு செல்லப்படுகின்றன. 

நாய்க்கடிக்கு கொடுக்கப்படும் மருந்துகள் இங்கு போடுவதே இல்லை. மருத்துவர்கள் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மருத்துவர் மாறி மாறி பணியில் இருக்க வேண்டும். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் இருக்க « வண்டிய மருத்துவர்கள் பணியில் இருப்பதே இல்லை. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதரப்பணிகள் துறை இணை இயக்குனர் சுரேஷ் கண்டும் காணாமல் அமைதி காத்து வருகிறார். இவர்கள் அனைவரும் கூட்டு களவாணிகள் போன்று செயல்படுகின்றனர். உயிர்காக்கும் மருத்துவ துறைக்கு பணிக்கு வந்து விட்டு எப்போதும் வீட்டிலும், தன்னுடைய சொந்த கிளினிக்கையும் கவனிப்பவர்கள்தான் அதிகம் இன்று மருத்துவர்களாக நடமாடுகின்றனர். இவர்கள் பெயரளவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்துவிட்டு வீட்டுக்கும், கிளினிக்குக்கும் சென்று விடுகின்றனர். 

இதனால் அந்த சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள் மருத்துவர்களாக செயல்பட ஆரம்பித்து விடுகின்றனர். இப்படித்தான் நோயாளிகள் சென்றால் மருந்து மாத்திரைகள் கொடுப்பது, ஊசி போடுவது, டிரிப் ஏற்றுவது போன்ற அனைத்து பணிகளையும் செவிலியர்களே மேற்கொள்கின்றனர். அத்துடன் ஒருபடி மேலே சென்று பார்மசிஸ்ட்டுகள் மருத்துவர்கள் போன்று செயல்படுகின்றனர். ஆதலால் பள்ளிக்குப்பத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் முதல், செவிலியர்கள், ஆயாம்மா உள்ளிட்ட அனைவரையும் கூண்டோடு மாற்றி விட்டு புதிய நன்கு பணியாற்றும் சேவை மனப்பான்மை கொண்டவர்களை பணியமர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருப்பத்தூர் சுகாதார மாவட்ட கட்டுப்பாட்டுக்குள் வரும் இந்த  பள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மேம்பாடு அடையச் செய்து 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்தி கொடுத்தால் செயல்படாமல் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டனர் இதுபோன்ற மருத்துவர்களும், செவிலியர்களும் என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு நாள் கூட  இந்த மருத்துவமனை எப்படி சயல்படுகிறது என்று எந்த உயரதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்தது கூட இல்லை. இதனால்தான் இந்த பரிதாப நிலைக்கு மருத்துவமனையின் நிர்வாகம் சென்றுவிட்டது.

அவரவர் விருப்பம்போல மருத்துவமனைக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். யாரையும் கேள்வி கூட கேட்க முடியாத நிலை இந்த மருத்துவமனையில் நிலவுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி மருத்துவர்கள் பணியை பார்க்கும் செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மருத்துவத்துறை இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label