OUR CLIENTS
காட்பாடியில் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்கலே... மாறாக பொதுமக்களுக்கு தண்ணீர் காட்டிய பரிதாபம்!
காட்பாடியில் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்கலே... மாறாக பொதுமக்களுக்கு தண்ணீர் காட்டிய பரிதாபம்! Posted on 08-May-2017 காட்பாடியில் அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்கலே... மாறாக பொதுமக்களுக்கு தண்ணீர் காட்டிய பரிதாபம்!

வேலூர், மே 8-
காட்பாடியில் அதிமுகவினர் இதுநாள் வரை தண்ணீர் பந்தல் திறக்காமல் அமைதி காத்து வருகின்றனர். மாறாக பொதுமக்களுக்கு தண்ணீர் கட்டி வரும் பரிதாப நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மே 4 முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் வெப்பத்தாக்கம் அதிகம் இருந்தது. வெளியில் நடமாடும் பொதுமக்களுக்கு நா வறட்சியை போக்கவும், தாகம் தணிக்கவும் ஆங்காங்கே ஆண்டுதோறும் அதிமுகவினர் நீர்மோர் பந்தல், தண்ணீர் பந்தல்களை திறந்து 40 நாட்களுக்கு பராமரித்து வருவார்கள். இப்போது அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் அணி என்று இரு அணிகளாக பிரிந்து போயின. அதோடு மட்டுமின்றி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை செய்த பணிகளே வேறு.

இப்போது அதிமுகவினர் எதுவும் செய்யாமல் ஓடி ஒளிந்து கொண்டனர். காட்பாடி தொகுதியில் எம்எல்ஏ சீட்டு கேட்டு பெற்ற எஸ்.ஆர்.கே. அப்பு டிஜிட்டல் பேனர்கள் வைத்து அரசியல் நடத்தி வந்தார். இப்போது அவரையும் காணவில்லை, பேனர்களையும் காணவில்லை. ஒன்றிய செயலாளர் கோரந்தாங்கல் குமார் பிரம்மபுரத்தில் நீர் மோர் பந்தல் திறந்துள்ளார். இவரது அலுவலகம் சித்தூர் சாலையில் இருந்தபோது ஏகபோகமாக செயல்பட்டது. கோரந்தாங்கல் குமார் மட்டும்தான் திமுகவினருக்கு எதிர் குரல் கொடுத்து வந்தார்.

இப்போது அவரது ஒன்றிய அலுவலகம் திருவலம் சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வடககு பகுதி, தெற்கு பகுதி செயலாளர்கள் என்று மார்தட்டி கொள்ளும் ஜனார்த்தனம், ரவி ஆகியோர் எந்த இடத்திலும் நீர் மோர் பந்தல் திறக்கவில்லை. மாறாக நமக்கென்ன என்று அமைதியாக இருக்கின்றனர். இதனால் காட்பாடி தொகுதியில் அதிமுக உள்ளதா என்று கேட்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. எதிர்கட்சியாக அதிமுக இருக்கும்போது ஓடி ஒளிந்து கொண்டவர்கள், அதிமுக ஆளுங்கட்சியாக வந்தவுடன் பொறுப்புகளை தட்டிப்பறித்து சென்றனர் ஜனார்த்தனமும், ரவியும். ஆனால் இவர்களது செயல்பாடு என்னவோ பூஜ்ஜியம்தான்.

நிலைமை இப்படி இருக்க  திமுகவினர் சித்தூர் சாலையில் துணை பதிவாளர் அலுவலகம் அருகில் நேற்று காலை நீர் மோர் பந்தல் திறப்பு விழாவை அமோகமாக நடத்தினர். இந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவை ஆண்டுதோறும் திமுகவினர் பிரமாண்டமான நிகழ்ச்சியாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இது அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால் அளுங்கட்சியாக இருந்து கொண்டு அதிமுகவினர் மக்கள் பணியில் கோட்டை விட்டதை என்னவென்று சொல்வது?.

கட்சி தலைமை இல்லாததால் தான்தோன்றி தனமாக கட்சி செயல்பட ஆரம்பித்துள்ளது மட்டும் தெரியவந்துள்ளது. நாம் ஏன் செலவு செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் அமுக்கி வாசிக்கின்றனர். இதனால் காட்பாடி தொகுதியில் திமுக மீண்டும் பிரகாசிக்க தொடங்கி விட்டது. இதற்கு திமுக பகுதி செயலாளராக செயல்படும் வன்னியராஜாவின் முழு ஓத்துழைப்புதான் என்று கழக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

Label